கடுப்பான ரசிகர்கள்..! யுவன், VP குடும்பத்துக்கு ஒரு கும்புடு!

கடுப்பான ரசிகர்கள்..! யுவன், VP குடும்பத்துக்கு ஒரு கும்புடு!
விஜய் - யுவன் காம்போ செட் ஆகவில்லை என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

விஜய் - யுவன் காம்போ செட் ஆகவில்லை என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள். யுவன், வெங்கட் பிரபு, கங்கை அமரன் என அனைவரும் சேர்ந்து விஜய் அண்ணாவுக்கு ஏன் இப்படி பண்ணீங்க என விஜய் ரசிகர்களின் புலம்பல்கள் தான் சமூக வலைத்தளங்களில் நேற்று இரவு முதல் வலம் வந்து கொண்டிருக்கிறது.

தி கோட் என்று பெயர் வைத்தால் மட்டும் பத்தாது. பாடல்களையும் அதற்கு ஏற்றாற்போல கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் வெங்கட் பிரபு, யுவன் சங்கர் ராஜா இருவரையும் கிழித்து தொங்கவிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அஜித்துக்கும், தனுஷுக்கும் சிறந்த இசையைக் கொடுத்துவிட்டு தளபதி என்று வந்தால் மட்டும் இப்படி கொடுக்கிறீர்களே யுவன் என விஜய் ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர். அந்த அளவுக்குதான் மூன்றாவது பாடல் அமைந்துள்ளது.

தி கோட் திரைப்படத்திலிருந்து முதல் பாடலான விசில் போடு வெளியான போது கூட இப்படி யாரும் புலம்பவில்லை. பாடல் சுமாராக இருந்தாலும் நாளடைவில் கேட்க கேட்க பழகிவிட்டது. பெரிய தாக்கம் இல்லை என்றாலும் ஏதோ பரவாயில்லை என்று கடந்துவிட்டனர் ரசிகர்கள். அதற்கு அடுத்து வந்த மெலோடி பாடலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில், மூன்றாவது பாடல் ஸ்பார்க் சாங் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது என தகவல் வந்ததும் இந்த பாடலாவது நம்மை காப்பாற்றுமா, அஜித், ரஜினி ரசிகர்களின் டிரோலிலிருந்து நாம் தப்பிப்போமா என்றே பயந்துகொண்டிருந்தனர் விஜய் ரசிகர்கள்.

ஆனால் எதிர்பார்த்ததை போல முந்தைய இரண்டு பாடல்களை விட மோசமாக இந்த பாடலை கொடுத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. அடுத்த மாதம் அவருக்கு சிங்கப்பூர், இலங்கை நாடுகளில் கான்செர்ட் நிகழ்ச்சி இருப்பதால் அதிலேயே அதிக கவனம் செலுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.

பாடல்கள் எதுவும் திரும்ப திரும்ப கேட்கும்படியாக இல்லை. அனிருத், தமன் இருவரும் எப்படி தளபதிக்கு பாடல் அமைத்து கொடுத்தார்கள். நீங்கள் டிரக் மேதை என்று சொல்லிவிட்டு இப்படி மோசமான பாடல்களைக் கொடுத்துள்ளீர்களே என விஜய் ரசிகர்களே எகிறி அடிக்கும் அளவுக்கு பாடல்கள் டிரோல் செய்யப்பட்டு வருகின்றன.

பாடல் இசையாவது ஒரு ரகத்தில் எடுத்துக் கொள்ளலாம். பாடல் வரிகளை யாரப்பா எழுதினார் என்று கோபத்தில் இருக்கின்றனர் ரசிகர்கள். அதிலும் அது வெங்கட் பிரபுவின் அப்பா, யுவனின் சித்தப்பா என்பது தெரிய வர , கங்கை அமரனை கிழித்து தொங்கவிடுகின்றனர் இணையதளங்களில்.

எல்லாம் சரி ஆமா தளபதிக்கு எதுக்குப்பா டிஏஜிங். மீசை, தாடியை மழித்துவிட்டு நான்கு நாட்கள் டயட்டிலிருந்தாலே அவர் சின்ன பையன் மாதிரிதானே இருப்பார். அவருக்கு ஏன் டி ஏஜிங் டெக்னாலஜி என ரசிகர்கள் புலம்பி வருவதால் படக்குழுவும் அப்செட்டில் இருக்கிறது.

Tags

Next Story