அவசரப்பட்டுட்டேன்! - தி கோட் படத்தை பார்த்த விஜய் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அவசரப்பட்டுட்டேன்! - தி கோட் படத்தை பார்த்த விஜய் சொன்ன அதிர்ச்சி தகவல்!
X
தான் நடித்த தி கோட் படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் விஜய், நான் அவசரப்பட்டுவிட்டேன்

தான் நடித்த தி கோட் படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் விஜய், நான் அவசரப்பட்டுவிட்டேன் என இயக்குநரிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் அரசியல்வாதியாக மாறப்போகும் விஜய் தனது கடைசி இரண்டு படங்களாக ஒப்பந்தமானது தளபதி 68 மற்றும் தளபதி 69. இதில் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை அவர் ஏஜிஎஸ் பட நிறுவனத்துக்கு இயக்கு கொடுக்கிறார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்துக்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று பெயர் வைக்கப்பட்டு படமும் தயாராகிவிட்டது.

விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் அவருடன் மீனாட்சி சவுத்ரி, சிநேகா, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு சென்னை, கேரளா, ரஷ்யா என பல இடங்களில் நடைபெற்றது. மேலும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த படத்துக்கான விஎப்எக்ஸ் பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று முடிந்துள்ளது. படமும் நிறைவு பெற, படத்தை தளபதி விஜய்க்கு போட்டு காட்டியுள்ளனர்.

முழு படத்தையும் பார்த்துவிட்டு வெளியே வந்த விஜய், வெங்கட் பிரபுவைப் பார்த்து கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன். உங்க கூட இன்னும் ரெண்டு படம் பண்ணிருக்கணும். கலக்கிட்டீங்க என்று சொல்லியிருக்கிறாராம். இதனால் இந்த படம் விஜய்க்கு ரொம்பவே பிடித்திருக்கிறது என சொல்லி விஜய் ரசிகர்கள் பரப்பி வருகின்றனர்.

Tags

Next Story