தி கோட் திரைவிமர்சனம்

தி கோட் திரைவிமர்சனம்
X
தி கோட் திரைவிமர்சனம்

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (கோட்) திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகிறது. தமிழ்நாட்டை தவிர்த்து பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் அதிகாலை 4 மணிக்கே ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுக்க காத்திருக்கின்றனர்.

புரமோஷனுக்கு விஜய் க்ரீன் சிக்னல்!

படத்தின் இசை வெளியீட்டு விழாவை தவிர்த்த விஜய், தற்போது படத்திற்கு தேவையான புரமோஷன்களை செய்ய சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

3 மணி நேர ரோலர் கோஸ்டர் ரைடு!

'கோட்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் நீளம் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் என்றாலும், ஒரு காட்சி கூட போர் அடிக்காத வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தணிக்கை குழு தரப்பில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

ஏஜிஎஸ் - விஜய் கூட்டணியின் மற்றுமொரு வெற்றியா?

'பிகில்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஏஜிஎஸ் நிறுவனம் மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், பிகில் படத்தின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விஜய், பிரபுதேவா, பிரசாந்த் என நட்சத்திர பட்டாளம்!

விஜய், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், மோகன், ஜெயராம், யோகி பாபு, சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் விஜயகாந்த் ஆகியோரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

விஜய்யின் மூன்று வெவ்வேறு கெட்டப்புகள்!

விஜய் இப்படத்தில் வயதான தோற்றம், நடுத்தர வயது ஏஜெண்ட் மற்றும் முரட்டு இளைஞர் என மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்து அசத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தணிக்கை குழுவின் பாராட்டு!

படத்தின் முதல் பாதி பரபரப்பாகவும், இரண்டாம் பாதி கிளைமேக்ஸ் வரை விறுவிறுப்பாகவும் செல்வதாக தணிக்கை குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story