'கழகத் தலைவன்' அல்ல 'கலகத் தலைவன்' படக்குழுவினர் விளக்கம்..!
நடிகர் உதய நிதி நடித்த கலகத் தலைவன் பட போஸ்டர்...
இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள 'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. அத்துடன், இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி நாயகனாக நடித்துள்ள 'கலகத் தலைவன்' படம் வரும் நவம்பர் முதல் வாரத்தில் உலகமெங்கும் வெள்ளித்திரையில் வெளியாகவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஒரு சிலர் படத்தலைப்பை 'கழகத்தலைவன்' என்று கூறிவருகின்ற நிலையில், 'நெஞ்சுக்கு நீதி' எனபதுபோல் இது 'கழகத்தலைவன்' என யூகத்தில் யாரும் குழப்பமாய்க் குறிப்பிட வேண்டாம். படத்தின் தலைப்பு 'கலகத் தலைவன்' என்பதே சரி என படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்தநிலையில், இவ்விரு படங்களை அடுத்து, உதயநிதி நடிக்கும் படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பாக தயாரிக்கவிருப்பதாகவும் படத்தை இயக்குநர் பிரசாந்த் முருகேசன் இயக்குவார் என்றும் அறிவித்திருந்தார்.
தற்போது, 'கலகத் தலைவன்', 'மாமன்னன்' படப்பணிகள் நிறைவடைந்த நிலையில், இயக்குநர் பிரசாந்த் முருகேசனைத் தொடர்புகொண்ட ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் 'உதயநிதி படப்பிடிப்புக்குத் தயாராகிவிட்டார். எனவே, படப்பிடிப்பைத் தொடங்க வேண்டும். அதற்கான வேலைகளைப் பாருங்கள். கிறிஸ்துமஸை ஒட்டி டிசம்பரில் படத்தின் அறிவிப்பை ஒரு டீசராக வெளியிடுவிட்டு அப்படியே படப்பிடிப்பைத் தொடங்கலாம்' என்று தெரிவித்துள்ளதாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu