நடிகர் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி பெருமிதப்படுத்திய கிரிக்கெட் வீரர்..!

நடிகர் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி பெருமிதப்படுத்திய கிரிக்கெட் வீரர்..!
X
நடிகர் சூர்யாவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரெய்னா, பிறந்தநாள் வாழ்த்துகள் கூறி பெருமிதப்படுத்தியுள்ளார்.

நடிகர் சூர்யாவுக்கு இன்று பிறந்தநாள். அவரது பிறந்த நாளுக்கு திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்து பெருமிதப்படுத்தினர். அதேபோல், சூர்யாவின் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை விதவிதமாகச் சொல்லி தெறிக்கவிட்டுள்ளனர்.

இந்தநிலையில், தமிழ்த் திரைப்படங்களை அதிகம் விரும்பி பார்க்கும் கிரிக்கெட் வீரரான ரெய்னா சூப்பர் ஸ்டார் ரஜினி, சூர்யா இருவருக்கும் தீவிரமான ரசிகராக எல்லோராலும் அறியப்பட்டவர். அதனால், ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க சென்னை வரும்போது, சூர்யாவுடன் நெருங்கி பழகும் வாய்ப்புகளும் ரெய்னாவுக்கு கிடைத்தன. இருவரும் சினிமாவில் இணைந்து நடித்தால் சிறப்பாக இருக்கும் என்ற அளவிற்கு, ரசிகர்களும் இவர்களின் நட்பை சிலாகித்துக் கூறிவருகின்றனர்.

இந்தநிலையில், பிறந்தநாள் கொண்டாடும் சூர்யாவிற்கு ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார். 'இந்தாண்டு உங்களுக்கு எல்லாமே சிறப்பாக அமையும்' எனவும் சூர்யாவை, ரெய்னா மனதார வாழ்த்தியுள்ளார். ரெய்னாவின் இந்த ட்வீட்டை, சூர்யா, ரெய்னா இருவரது ரசிகர்களும் வைரலாக்கி வருகின்றனர்.

கடந்தாண்டு ஒருநிகழ்ச்சியில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ரெய்னா, சூர்யாவிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அதாவது, விளையாட்டு வீரர்களின் பயோபிக் திரைப்படங்கள் அதிகம் வெளியாகி வரும் நிலையில், ரெய்னாவிடம் உங்கள் பயோபிக் திரைப்படம் உருவாகுமா? என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

மேலும், அதில் உங்கள் பாத்திரத்தில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் எனவும் கேட்டனர். அப்போது சற்றும் யோசிக்காத ரெய்னா, சூர்யா நடித்தால் தரமாக இருக்கும் எனக் கூறியிருந்தார். ரெய்னாவின் ஆசை இந்தாண்டு நிறைவேறுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!