நன்றி சிரஞ்சீவிகாரு! நடிகர் கமல்ஹாசன்

நன்றி சிரஞ்சீவிகாரு! நடிகர் கமல்ஹாசன்
X

சிரஞ்சீவி விருந்தில் கலந்து கொண்ட கமல், லோகேஷ் கனகராஜ் மற்றும் சல்மான்கான்.

Chiranjeevi Latest News - நடிகர் சிரஞ்சீவி விருந்தளித்து பாராட்டியதற்கு கமலும் லோகேஷும் நன்றி தெரிவித்ததை, சிரஞ்சீவி வெளியிட்டார்.

Chiranjeevi Latest News - நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில்… நடிப்பில்… இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ஹாட்ரிக் வெற்றியடித்து இன்னும் வசூல் சாதனை உயரத்தில் உயர்ந்து கொண்டே இருக்கும் 'விக்ரம்' படம் பார்த்து.. வியந்து… மகிழ்ந்து… கொண்டாட்ட மனத்தோடு, தனது நெடுங்கால நண்பர் நடிகர் கமல்ஹாசனையும் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜையும் வீட்டுக்கு அழைத்து விருந்தளித்தார் தெலுங்குப் பட உலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி.

அச்சமயம், ஐதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்த சல்மான் கானும் விருந்து உபசரிப்பில் கலந்துகொண்டார். விருந்துண்ணும் முன்பாக சிரஞ்சீவியும் சல்மான் கானும் கமலுடன் மனமொன்றி அளவளாவி மகிழ்ந்தனர். 'விக்ரம்' படத்தின் சிறப்புக்கும் வியத்தகு வெற்றிக்கும் கமலையும் லோகேஷையும் விண்ணுயரப் பாராட்டினர்.. வாழ்த்தினர் சிரஞ்சீவியும் சல்மான் கானும்..

மாலையில் நடந்த இந்த விருந்தோம்பல் குறித்து கமலும் லோகேஷும் தன்னிடம் பகிர்ந்த நன்றி நவிலலை மறுநாள் காலை சிரஞ்சீவி வெளிட்டிருந்தார். அழைப்பினை ஏற்று வீட்டுக்கு வந்த கமலை கட்டியணைத்து சால்வை அணிவித்து மலர்க்கொத்து அளித்து வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துவிட்டு விருந்தளித்த பின் விடைபெறும்போது என்னிடம் நண்பர் கமல்ஹாசன், "நன்றி சிரஞ்சீவி காரு. கே.பாலசந்தரிடம் நாம் இருவரும் ஒன்றாக இருந்த காலத்தை நினைவு கூர்ந்தது மகிழ்ச்சியாக இருந்தது. நமது பரஸ்பர நண்பரான சல்மான் பாயுடன் உரையாடியதும் மகிழ்ச்சி. சிறந்த மாலையாக அமைந்தது. எங்களை கவனித்துக் கொண்ட உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் நன்றி" எனத்தெவித்தார்.

அதேபோல் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், "சிறப்பான மாலையாக அமைந்தது. எங்களை அழைத்ததற்கு நன்றி. சல்மான் சாரை சந்தித்ததும் சிறந்த மகிழ்ச்சி. கமல் சாருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி," எனத் தெரிவித்ததாக சிரஞ்சீவி குறிப்பிட்டுள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story