தங்கலான் ஷூட்டிங் எப்போது நிறைவடையும்? இதோ அப்டேட் !

தங்கலான் ஷூட்டிங் எப்போது நிறைவடையும்? இதோ அப்டேட் !
X
விரைவில் முடிகிறது தங்கலான் படப்பிடிப்பு. உலக தரத்தில் உருவாகி வரும் இந்த படத்தை நிச்சயம் ரசிகர்கள் பெருமளவில் வரவேற்று கொண்டாடுவார்கள் என்று கூறப்படுகிறது.

நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குநர் பா ரஞ்சித் இயக்கிவரும் படம் தங்கலான். கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு சென்னையில் தொடங்கி நடைபெற்ற படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில், அதனைத் தொடர்ந்து கர்நாடக மாநிலம் கேஜிஎஃபிலும் தொடர்ந்தது. பூ படத்தில் அறிமுகமான மலையாள நடிகை பார்வதி, இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் இந்த படத்துக்காக உடல் எடை குறைத்து அதிக மெனக்கெட்டு நடிப்பதாக கூறப்படுகிறது. இவர் மட்டுமின்றி படத்தில் அனைவருமே மிகுந்த கஷ்டப்பட்டு கதாபாத்திரமாக மாறியிருக்கிறார்களாம்.


படத்தில் மற்றொரு நாயகியான மாளவிகா மோகனன் சிலம்பு உள்ளிட்ட பல பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இவர்களுடன் பசுபதி உள்ளிட்ட இன்னும் பல நடிகர்கள் தங்களது நடிப்பு திறனைக் காண்பித்து உருவாகி வரும் தங்கலான் திரைப்படம் மே மாத இறுதியில் திரைக்கு வரும் என கூறப்படுகிறது. இதனால் இந்த மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளது படக்குழு.

அடுத்து 10 நாட்கள் ஈவிபி படப்பிடிப்பு தளங்களிலும் 5 நாட்கள் மதுரையிலும் படப்பிடிப்பு பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இவை பேட்ச் ஒர்க் காட்சிகளாகவும் படத்தில் வரும் சில நிமிட காட்சிகளாகவும் இருக்கலாம். இன்னும் சரியாக 30 நாட்களுக்குள் படம் நிறைவடைந்தது என படக்குழுவே அறிவிக்க வாய்ப்புகள் அதிகம்.


ஜி வி பிரகாஷ் இசையில் உருவாகும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் ரஞ்சித்தின் நீலம் படத் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. உண்மைச் சம்பவங்கள் பல இந்த படத்தில் காட்சிகளாக இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

தி பீச், தி பியானிஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரிட்டிஷ் நடிகர் டான் கால்டஜிரோனோ இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படம் 1870களில் நடக்கும் கதையைப் பற்றி விவரிக்கிறது. அதற்காக அந்த காலத்தில் கேஜிஎஃப் எப்படி இருந்தது உள்ளிட்டவற்றை பார்த்து பார்த்து செதுக்கியுள்ளனராம். அதுமட்டுமின்றி கதை வேறு இடங்களுக்கும் விரிவடைகிறது என்று கூறுகிறார்கள்.


படத்தைப் பற்றி தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியே வரும் போது ரசிகர்களின் ஆர்வம் அதிகரிக்கிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தவாறு இருக்கிறது. படக்குழுவுக்கும் இயக்குநரை மிகவும் பிடித்துவிட்டதாகவே தெரிகிறது. முக்கியமாக நடிகர் விக்ரம், பா ரஞ்சித் உடனான நட்பு துவங்கி இருவரும் நெருக்கமாகி, அவரின் புகைப்படங்கள் இணையதளத்தில் பகிரும் அளவுக்கு நட்பாகிவிட்டனர் போலும்.


ஏப்ரல் மாத இறுதியில் சார்பாட்டா ரவுண்டு 2 படத்துக்கு பா ரஞ்சித் தயாராகுவார் என்று கூறும்போது, இந்த படம் அதற்குள் நிறைவடைந்துவிடும் என்றே நம்பப்படுகிறது. சார்பாட்டா 2 படத்துக்கு பிறகு கமல்ஹாசன் படத்துக்காக ஸ்க்ரிப்டி தயார் செய்யும் பா ரஞ்சித் அதற்காக 6 மாத காலங்கள் எடுத்து சிறப்பாக திட்டமிட இருக்கிறாராம். 2024ம் ஆண்டு கமல்ஹாசன் - பா ரஞ்சித் படம் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!