தங்கலான் படத்தின் சூப்பர் அப்டேட்!

தங்கலான் படத்தின் சூப்பர் அப்டேட்!
X
தங்கலான் படப்பிடிப்பு கடந்த ஆண்டே துவங்கி நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 80 சதவிகித படப்பிடிப்பு கடந்த மாதமே முடிந்துவிட்ட நிலையில், இன்னும் சில காட்சிகள் எடுக்க வேண்டியது பாக்கி இருக்கிறது என்று கூறப்படுகிறது.

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் தங்கலான். பா ரஞ்சித் இயக்கி வரும் இந்த படத்தை கே இ ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இந்த படத்திலிருந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. thangalaan update


பொன்னியின் செல்வன், கோப்ரா உள்ளிட்டஆகிய படங்களுக்கு பிறகு விக்ரம் நடித்து வரும் திரைப்படம் தங்கலான். இந்த படத்தில் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார். விக்ரம் ஜோடியாக பார்வதி, மாளவிகா மோகனன் இருவரும் நடிக்கிறார்கள். இவர்கள் படத்துக்காக சில தற்காப்பு கலைகளையும் கற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. thangalaan update latest news


பா ரஞ்சித் இயக்கும் இந்த படம் எளியவர்களின் வலியையும் ஆதிக்க வாதிகளின் கொடூரத்தையும் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக மாநிலம் கே ஜி எஃப் என்று அழைக்கப்படும் கோலார் தங்க வயல் பகுதியில் அடிமைப்பட்டு கிடந்த மக்களின் வாழ்வையும் அவர்கள் அனுபவித்த வலிகளையும் தனது சிறந்த திரைக்கதை மூலம் எடுத்துக் காட்ட வருகிறார் பா ரஞ்சித். thangalaan release date

விக்ரம் படம், பா ரஞ்சித் இயக்கம் என்பதால் இந்த படத்துக்கு மிகப் பெரிய அளவிலான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. thangalaan movie release date


தங்கலான் படப்பிடிப்பு கடந்த ஆண்டே துவங்கி நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 80 சதவிகித படப்பிடிப்பு கடந்த மாதமே முடிந்துவிட்ட நிலையில், இன்னும் சில காட்சிகள் எடுக்க வேண்டியது பாக்கி இருக்கிறது என்று கூறப்படுகிறது.

இன்னும் 25 நாட்களில் படம் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் தீபாவளிக்கு பிறகான நாட்களில் படத்தை திரைக்கு கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்திலிருந்து ஒரு முக்கிய அப்டேட் வரும் ஏப்ரல் 17ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விக்ரமின் பிறந்த நாள் வரும் ஏப்ரல் 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அதனை கொண்டாடும் வகையில் படக்குழு சார்பில் ஒரு வீடியோ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது தங்கலான் படப்பிடிப்பிலிருந்து எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!