தளபதி 69 ல் இணையும் உலகநாயகன்! வேற லெவல் அப்டேட்!

தளபதி 69 ல் இணையும் உலகநாயகன்! வேற லெவல் அப்டேட்!
X
தளபதி விஜய்யுடன் உலக நாயகன் கமல்ஹாசன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தளபதி விஜய் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வந்த நிலையில், இப்போது புதிய செய்தி ஒன்று பரவி வருகிறது. அதில் தளபதி 69 படத்தில் கமல்ஹாசனும் இணைய உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் கடந்த சில ஆண்டுகளாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு விசயம் இருவரும் இணைந்து ஒரு படம் வெளியானால் அருமையாக இருக்கும் என்பதுதான். அதற்கான வாய்ப்பு இப்போது வந்துள்ளது.

கமல்ஹாசன் பிறந்தநாள்

நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசன் தனது பிறந்த நாளில் தடபுடல் விருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு திரைத்துறையினர் உட்பட அவரது நட்பு வட்டாரங்கள் பலரையும் அழைத்து உபசரித்து அனுப்பியிருந்தார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் என பலரும் இந்த விருந்தில் கலந்துகொண்டிருந்தனர். இதே நாளில் இணையதளங்களில் கமல்ஹாசனுடன் விஜய் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படமும் வைரலானது. லியோ படத்துக்காக வாய்ஸ் ஓவர் கொடுக்கும் போது எடுத்த படம் அது.

தளபதி 68


லியோ படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் அவரது 68 வது படத்தில் நடித்து வருகிறார்.

விஜய்யுடன் முதல்முறையாக இணைந்துள்ள வெங்கட்பிரபு இந்த படத்தில் டைம் டிராவல் சம்பந்தமான ஒரு திரைக்கதையை உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. விஜய் ஜோடியாக மீனாட்சி சௌத்ரி, சிநேகா நடிக்க, லைலா, பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோர் படத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் நடிக்கிறார்.

ஷூட்டிங் பரபர

தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி, இப்போது இரண்டாவது கட்டப் படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்றிருக்கிறார்கள். அங்கு மிகப் பிரம்மாண்டமான கார் சேஸிங் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தில் வருவது போல மிகவும் ஆழமான சேஸிங் காட்சிகள் இந்த படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. லியோ பட வெற்றிவிழா நடைபெற்ற நாளிலேயே விழாவை முடித்துக்கொண்டு கையோடு தாய்லாந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார் விஜய்.

தளபதி 69 இயக்குநர்


கார்த்திக் சுப்பராஜ் விஜய்க்கு ஒரு கதையை தயாராக வைத்திருப்பதாக கூறப்படும் நிலையில், தளபதி 69 படத்தை அவர் இயக்குவார் என்று பேச்சு எழுந்துள்ளது. ஆனால் நமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மிகப் பெரிய பொருட்செலவில் அட்லீ இந்த படத்தை இயக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

கௌதம் வாசுதேவ் மேனன், ஏ ஆர் முருகதாஸ் ஆகியோரும் விஜய்யுடன் இணைய காத்திருக்கின்றனர்.

தளபதி 69 தயாரிப்பு

தளபதி 69 படத்தை யார் இயக்கினாலும் இந்த படத்தை கமல்ஹாசன்தான் தயாரிப்பார் என்று ஒரு புதிய தகவல் வந்துள்ளது. லியோ படத்தையே கமல்ஹாசன் தயாரிக்க முன்வந்தாராம். ஆனால் லலித்குமாருக்கு கொடுத்த வாக்குறுதி காரணமாக விஜய் அடுத்த படத்தை கமல்ஹாசன் நிறுவனத்துக்கு செய்து கொடுப்பதாக சொல்லியிருக்கிறாராம்.

தற்போது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் RKFI நிறுவனம் சிவகார்த்திகேயன் - ராஜ்குமார் பெரியசாமி படத்தை தயாரித்து வருகிறது. இதற்கான ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அடுத்து சிம்பு - தேசிங்கு பெரியசாமி படம் கைவசம் இருக்கிறது. ஹெச் வினோத் - கமல்ஹாசன் இணையும் படத்தையும் அவரது நிறுவனமே தயாரிக்கிறது.

உலகநாயகன் 234


மணிரத்னம் - கமல்ஹாசன் இணையும் தக்லைஃப் படத்தையும் மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் உடன் இணைந்து ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் அறிமுக வீடியோ கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி இந்தியா முழுமைக்கும் வைரலானது.

மணிரத்னம், கமல்ஹாசன் , ஏ ஆர் ரஹ்மான் இணைவதால் இந்த படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மிகவும் பேசப்பட்டு வரும் சண்டைக் காட்சிகள் அன்பறிவ் மாஸ்டர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. ரவி கே சந்திரன் ஒளிப்பதிவும் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

இந்தியன் 2 படம் விரைவில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அடுத்து இந்தியன் 3 படத்துக்கான படப்பிடிப்பும் தொடர்ந்து நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விவேக், நெடுமுடிவேணு உள்ளிட்டோரின் காட்சிகள் அப்படியே இடம்பெறவுள்ளன.

தளபதி 68 ரிலீஸ்

விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுவென நடைபெற்று வரும் நிலையில் படம் 2024 ஆயுதபூஜை தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!