காஷ்மீரில் லியோ.. லீக்கான வீடியோ குறித்த அப்டேட் இதோ!

விஜய் நடிக்கும் லியோ பட வீடியோ லீக்
விஜய் நடிக்கும் லியோ படத்தை லோகேஷ் கனராஜ் இயக்கி வருகிறார். சென்னை, கொடைக்கானல் ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு தற்போது காஷ்மீர் சென்றிருக்கிறது படக்குழு.
இந்நிலையில், லியோ படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்கிற அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருந்தது. அதில் ஆக்ஷன் கிங் அர்ஜூன், மன்சூர் அலிகான், திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.
லலித்குமார் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்துள்ளார். இந்த படத்தின் ஒளிப்பதிவு பணியை கவனிக்கிறார் மனோஜ் பரமஹம்சா. அனிருத் இசையில் இந்த படம் வரும் அக்டோபர் 19ம் தேதி ஆயுத பூஜை தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தொகுப்பு பிலோமின் ராஜ், கலை இயக்குநர் சதீஷ்குமார், நடன இயக்கம் தினேஷ் மாஸ்டர், வசனம் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், தீரஜ் வைத்தி ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். சண்டை பயிற்சியாளர்களாக அன்பறிவ் மாஸ்டர்கள் இருக்கிறார்கள். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் இருக்கிறார்.
லியோ படத்தின் ஆடியோ உரிமம் பிரபல சோனி மியூசிக் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சாட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமம் சன்டிவிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படம் இப்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. அப்போது விஜய் சம்பந்தப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனை எந்த வித முன்னறிவிப்பும் இன்றி நீக்க முடிவு செய்துள்ளது படக்குழு. தயாரிப்பாளர் இதனை தனது டிவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி லியோ படம் தொடர்பான எந்தவித புகைப்படமும், வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவினால் அதை முன்னறிவிப்பின்றி உடனடியாக நீக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu