Leo update மே 15 இது நடந்தே ஆகணும்.. கட்டளையிட்ட விஜய்! ஓகே சொன்ன லோகி!

Leo update மே 15 இது நடந்தே ஆகணும்.. கட்டளையிட்ட விஜய்! ஓகே சொன்ன லோகி!
X
லோகேஷ் கனகராஜுக்கு விஜய் அன்புக் கட்டளை இட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்த படம் விக்ரம். கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நட்புக்காக சூர்யா ஆகியோர் நடித்து அசத்தியிருந்தனர். இந்த படம் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய சாதனையை படைத்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது.


இந்த வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் மீண்டும் தளபதி விஜய்யை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். மாஸ்டர் படத்தின்போதே விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாகும் என்பது தெரியவந்தது.

விஜய், அர்ஜூன், திரிஷா, ப்ரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் நடித்து வரும் மிகப் பெரிய படமான லியோ இப்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இங்கு 2 மாதத்துக்கும் அதிகமான நாட்கள் தங்கியிருந்து முழு படத்தையும் முடித்துவிட்டு வர திட்டமிட்டுள்ளது படக்குழு. கடைசியாக வந்த அப்டேட்டின் படி இது எல்சியூ படம்தான் எனவும் அதில் சந்தனம் கதாபாத்திரத்தில் வரும் விஜய்சேதுபதியும் இருப்பார் என சந்தேகிக்கப்படுகிறது.


முதல் ஷெட்யூலை சென்னையில் முடித்துக்கொண்டு இரண்டாவது ஷெட்யூலுக்காக காஷ்மீரில் டெண்ட் அடித்துள்ளது படக்குழு. இடையில் கொடைக்கானலில் மன்சூர் அலிகானின் காட்சிகள் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் படக்குழு மொத்தமும் காஷ்மீரில் இருக்கிறது. அனைவருக்குமான காம்பினேசன் காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டு வருகின்றன. மேலும் காஷ்மீரிலிருந்து புறப்பட்டு சென்னையில் இன்னுமொரு ஷெட்யூல் இருக்கிறதாம். ஏப்ரல் 14ம் தேதிக்குள் முடித்துவிட்டு பின் ஒரு 10,15 நாட்கள் ஓய்வு எடுக்கிறதாம் படக்குழு.


மீண்டும் மே மாதம் முதல் வாரத்திலேயே சென்னையில் ஷூட்டிங் துவங்கி 15ம் தேதிக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட வேண்டும் என அன்புக் கட்டளையிட்டிருக்கிறாராம் விஜய். அட்லீஸ்ட் என் போர்சனை முதலில் முடித்துவிட்டு என்னை அனுப்பி விடுங்கள் லோகி என்றும் கேட்டிருக்கிறாராம். தேவைப்பட்டால் ஓய்வு நாட்களை 15லிருந்து 7,8 ஆக கூட குறைத்துவிட்டு வேலை செய்யலாம் என்றிருக்கிறாராம். படத்தை முதலில் முடிக்க வேண்டும் அதன் பின்னர் பல திட்டங்கள் இருப்பதாக விஜய் கூறியிருக்கிறார் போலிருக்கிறது. இதனால் படம் வேக வேகமாக முடிந்து வருகிறது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!