மாற்றுத்திறனாளி ரசிகரை 'அலேக்' ஆக துாக்கிய விஜய்

மாற்றுத்திறனாளி ரசிகரை அலேக் ஆக துாக்கிய விஜய்
X

THALAPATHY VIJAY Fans Meet-- நடிகர் விஜய்.

THALAPATHY VIJAY Fans Meet-சமீபத்தில், பனையூரில் உள்ள தனது பண்ணை வீட்டில் ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய், புகைப்படம் எடுக்க ஆசைப்பட்ட மாற்றுத்திறனாளி ரசிகரை இரண்டு கைகளால் துாக்கி பிடித்தபடி புகைப்படத்துக்கு 'போஸ்' கொடுத்தது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

THALAPATHY VIJAY Fans Meet, thalapathy vijay latest news - நடிகர் விஜய், அவரது ரசிகர்களால் 'இளைய தளபதி' என அழைக்கப்பட்டார். இப்போது, 'தளபதி' என அழைக்கப்படுகிறார். அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய 'ரசிகன்' என்ற படத்தில், தமிழ் சினிமாவில் விஜய் அறிமுகமானார். தொடர்ந்து, சில படங்களில் நடித்தார். கேப்டன் விஜய்காந்துடன் நடித்த 'செந்துாரப்பாண்டி' விஜய்க்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை தந்தது. விக்கிரமன் இயக்கிய 'பூவே உனக்காக' படத்தின் மூலம், ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 'காதலுக்கு மரியாதை' படத்துக்கு பிறகு, முன்னணி வரிசை நடிகர்களில் ஒருவராக முன்னேறினார்.


'குஷி', 'துள்ளாத மனமும் துள்ளும்' , 'ஒன்ஸ்மோர்' 'பத்ரி', 'பகவதி', மின்சாரக்கண்ணா, ப்ரண்ட்ஸ் படங்களை தொடர்ந்து, 'கில்லி' படத்தின் மூலம், ஸ்டார் நடிகராக முன்னிலை பெற்றார். அதன்பின், விஜய் படங்கள் ரிலீஸ் என்பதே, ரசிகர்களுக்கு திருவிழாவாக மாறிப்போனது.

திருமலை, சிவகாசி, திருப்பாச்சி என அடுத்தடுத்த படங்களில், விஜய் 'ஹிட்' அடித்தார். பிரபுதேவா இயக்கத்தில் 'போக்கிரி' படம், தமிழ் சினிமாவில் விஜய்க்கு திருப்பு முனையாக அமைந்தது. இந்நிலையில், விஜய் அரசியலுக்கு வருகிறார் என்ற தகவலும் அதிகமாக பரவியது. இதில், ரசிகர்களுக்காக விஜய் மன்றக்கொடியும் அறிமுகமானது. ஆனால், அடுத்தடுத்து வந்த 'வில்லு', 'குருவி', 'அழகிய தமிழ் மகன்', 'சுறா' உள்ளிட்ட படங்கள் படுமோசமான படங்களாக அமைந்தது, ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது.


எனினும், மலையாள நடிகர் மோகன்லாலுடன் நடித்த 'ஜில்லா' மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய ' துப்பாக்கி' படங்கள், இழந்த செல்வாக்கை திரும்ப விஜய்க்கு பெற்றுத் தந்தது. அடுத்து வந்த 'தெறி', 'புலி', 'பிகில்' 'மாஸ்டர்' 'பீஸ்ட்' படங்களை அடுத்து, இனி 'வாரிசு' படம் பொங்கலுக்கு வர உள்ளது.


சமீபமாக, விஜய் ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். சென்னையை அடுத்துள்ள பனையூரில், தனது பண்ணை வீட்டில், தனது ரசிகர்களை வரவழைத்து சந்திக்கிறார். விஜய் ரசிகர் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட , மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனைகளை நடத்துகிறார்.நேற்று, பனையூரில் நடந்த ரசிகர் மன்ற கூட்டத்தில், கருப்பு பேண்ட் - சட்டையில், 'சால்ட் அண்ட் பெப்பர்' தாடி, மீசையுடன் வந்த விஜய், கூடியிருந்த ரசிகர்களை பார்த்து உற்சாகமாக கையாட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 'விஜய், விஜய்' என, அங்கிருந்த ரசிகர்கள் உற்சாக கூச்சலிட்டனர். மாவட்ட, மாநில நிர்வாகிகளை சந்தித்த பின், ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற ரசிகர்கள், விஜய் உடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.


அப்போது, நடக்க முடியாத நிலையில் இருந்த மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுக்க விரும்புவதாக கூற, அவரை அருகில் வரவழைத்து, அப்படியே 'அலேக்' ஆக துாக்கி, கைகளில் ஏந்திய நிலையில், புகைப்படத்துக்கு போஸ் தந்த விஜய், அந்த மாற்றுத்திறனாளி ரசிகரிடம் ' என்ன நண்பா, நல்லா இருக்கிறீங்களா?' என, நலமும் விசாரித்துள்ளார். இதுதான், இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!