தளபதி 69 படம் கைவிடப்படுகிறதா?

தளபதி 69 படம் கைவிடப்படுகிறதா?
X
கைவிடப்படும் தளபதி 69. நேரடி அரசியலுக்கு வருகிறாரா விஜய்?

தளபதி 69 திரைப்படம் கைவிடப்படுவதாகவும், விரைவில் அவர் அரசியல் எண்ட்ரி இருக்கும் எனவும் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்த உண்மை என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் தி கோட். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் விஜய் ஜோடியாக மீனாட்சி சவுத்ரி, சிநேகா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பிரபுதேவா, பிரசாந்த், மோகன் உள்ளிட்ட பிரபல நடிகர்களும் இந்த படத்தில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நட்சத்திர பட்டாளம் இருப்பதால் படத்துக்கு இன்னும் அதிக எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்த படத்தை அடுத்து தளபதி 69 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தயாரிப்பாளர் கிடைக்காமல் தவித்து வந்தார் விஜய். இயக்குநரை முடிவு செய்துவிட்டு தயாரிப்பாளர் கிடைக்காமல் இருப்பதால், நேரடியாகவே அரசியலுக்கு செல்லலாம் என்று முடிவு செய்துள்ளதாகவும், தி கோட் திரைப்படமே அவரது கடைசி படம் என்றும் தகவல் பரவி வருகிறது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!