thalapathy 69 director வம்சி இல்லியாம்... மித்ரனை டிக் செய்த விஜய்! உண்மை என்ன?

thalapathy 69 director வம்சி இல்லியாம்... மித்ரனை டிக் செய்த விஜய்! உண்மை என்ன?

தளபதி விஜய் புகைப்படம்

விஜய் வேறு ஒரு கணக்கு போட்டிருப்பதாகவும் அதில் லோகேஷை அடுத்து அட்லீயுடன் இணைவதாகவும் கூறுகிறார்கள். தளபதி 68 படம் அட்லீ இயக்கத்தில் வெளிவந்ததும், தளபதி 69 படத்துக்காக இதுவரை இணையாத புது இயக்குநரைத் தேர்ந்தெடுக்கிறார் விஜய்.

வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்த விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு லியோ என்று பெயர் வைக்கப்பட்டு ஷூட்டிங்கும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வாரிசு படமும் வசூலில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் மீண்டும் வம்சியுடன் இணைந்து ஒரு படத்தில் பணிபுரிய விஜய் சம்மதித்திருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

வம்சியுடன் விஜய் மீண்டும் இணையும் படத்தை தில் ராஜு தயாரிக்க இருப்பதாகவும், வம்சி தனது ஸ்க்ரிப்ட் பணியைத் துவங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. வாரிசு படத்துக்கான கதையைச் சொல்லும்போதே இன்னொரு ஒன்லைனையும் சொல்லியிருக்கிறார் வம்சி. விஜய்க்கு அந்த லைனும் பிடித்திருப்பதால், வம்சியுடன் இணைய அதிக வாய்ப்பு இருப்பது உண்மைதான். ஆனால் அடுத்தடுத்து அவருடனேயே பணிபுரிய விஜய் சம்மதிக்க மாட்டார் என்கிறார்கள் கோலிவுட் தரப்பினர்.

விஜய் வேறு ஒரு கணக்கு போட்டிருப்பதாகவும் அதில் லோகேஷை அடுத்து அட்லீயுடன் இணைவதாகவும் கூறுகிறார்கள். தளபதி 68 படம் அட்லீ இயக்கத்தில் வெளிவந்ததும், தளபதி 69 படத்துக்காக இதுவரை இணையாத புது இயக்குநரைத் தேர்ந்தெடுக்கிறார் விஜய்.

அரசியலிலும் ஆர்வம் கொண்டிருக்கும் விஜய் மக்களுக்கு நல்லது செய்யும் வகையிலான ஒரு கதாபாத்திரம் பண்ண வேண்டும் என திட்டமிட்டிருக்கிறாராம். அவ்வப்போது கத்தி, மெர்சல் உள்ளிட்ட படங்களில் மக்களுக்கான அரசியல் பேசியவர் மாஸ்டர் படத்திலும் சில நீதி விசயங்களைப் பேசியிருப்பார். இதுபோல முழு நீளப் படம் ஒன்றிலும் விஜய் நடிக்க காத்திருக்கிறாராம். இதனால் பி எஸ் மித்ரனிடம் கதை கேட்க சொல்லி அனுப்பியிருக்கிறாராம்.

ஏற்கனவே மித்ரனிடம் ஒரு கதை தயாராக இருப்பதாகவும் லோகேஷ் படம் முடிந்த பிறகு ஒரு நாள் ஒன்லைன் கூற வரச் சொல்லியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை அவர் கூறிய லைன் ஓகே ஆனால் நிச்சயம் மித்ரன்தான் தளபதி 69 படத்தை இயக்குவார் என்று கூறுகிறார்கள். இதனிடையே இயக்குநர் ஷங்கரும் விஜய்க்கு கதை சொல்ல தயாராக இருக்கிறாராம். ராம்சரண் 15 படத்துக்கு பிறகு அவர் விஜய் அல்லது ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்கலாம் என்று யோசித்து வருகிறார்.

Tags

Next Story