Thalapathy 68 படத்தில் இவருக்கு சர்ப்ரைஸ் ரோல்..? ரோலெக்ஸ் மாதிரியா?

Thalapathy 68 படத்தில் இவருக்கு சர்ப்ரைஸ் ரோல்..? ரோலெக்ஸ் மாதிரியா?
X
Thalapathy 68 படத்தில் இவருக்கு சர்ப்ரைஸ் ரோல்..? ரோலெக்ஸ் மாதிரியா என்று கேட்கும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் சாதனை படைத்தது. இந்நிலையில், விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68ஆவது படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்க, பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, கங்கை அமரன், மைக் மோகன், ஜெயராம், பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கூடுதல் வேடங்களில் வெங்கட் பிரபுவின் மற்ற நண்பர்கள் அனைவரும் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் வந்து நடித்து கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் ஷூட்டிங் கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் தொடங்கியது. பிரபுதேவா, விஜய், பிரசாந்த் உள்ளிட்டோர் பங்குபெற்ற படப்பிடிப்பு சென்னையில் பிரபல ஷூட்டிங் அரங்கில் நடைபெற்றது. தற்போது பாங்காக் நகரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. லியோ படத்தின் வெற்றி விழா நடைபெற்ற அந்த நாள் இரவே விமானத்தில் புறப்பட்டு சென்றார் விஜய். ஒருநாள் கூட தாமதிக்காமல் படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தளபதி 68 படத்தில் ஜெய் ஒரு ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரோல் மிகப்பெரிய திருப்புமுனையாக கதையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே படத்தில் மைக் மோகனும் இருப்பதால் இவர்களில் யார் பலம் வாய்ந்த கதாபாத்திரம் என்பதை கணிக்க முடியாத வகையில் ரகசியமாக வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு.

விக்ரம் படத்தில் எப்படி சூர்யா ரோலை லோகேஷ் கனகராஜ் சர்ப்ரைஸாக இறக்கினாரோ அதே ஃபார்முலாவை தளபதி 68ல் வெங்கட் பிரபு ஃபாலோ செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது. ஜெய் இருப்பதை அரசல் புரசலாக பலர் பேசி வந்தாலும் அதிகாரப்பூர்வமாக தகவல் கிடைக்கும் வரை யாரும் நம்ப மாட்டார்கள்.

விஜய்யும், ஜெய்யும் இணைந்து பகவதி படத்தில் நடித்திருந்தனர். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. எனவே, தளபதி 68 படத்தில் ஜெய்யின் ரோல் ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெய் பல படங்களில் நடித்திருந்தாலும் பெரிய ஹிட் படம் என எதுவும் இதுவரை அமையவில்லை. ஆனால் இம்முறை ஜெய்க்கு மிக வலுவான ரோல் ஒன்றை கொடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

தளபதி 68 படத்தின் மிக முக்கிய கதாபாத்திரமாக ஒட்டுமொத்த கதையையும் பிறழச் செய்யும் வகையில் ஜெய்யின் கதாபாத்திரம் அமையும் என்கிறார்கள். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு ஜானர் இதுவரை வந்ததில்லை என்று சொல்லப்படுகிறது.

தளபதி 68 படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளராக சித்தார்த்தா நூனி, படத்தொகுப்பாளராக வெங்கட்ராஜன் ஆகியோர் பணியாற்றுகின்றனர். படம் 2024 ஆம் ஆண்டு திரைக்கு வரவுள்ளது.

விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி

தளபதி 68 படத்தில் ஜெய் நடிக்கிறார் என்ற தகவல் விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. விஜய் மற்றும் இரண்டாம் கட்ட நடிகர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன. எனவே, தளபதி 68 படமும் வெற்றிபெறும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!