Thalapathy 68 Villain இவரா? இல்ல அவரா?

Thalapathy 68 Villain இவரா? இல்ல அவரா?
தளபதி 68 படத்தின் வில்லனாக Thalapathy 68 Villain நடிக்க இருப்பது இவரா? இல்ல அவரா? என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

தளபதி விஜய், வெங்கட் பிரபுவுடன் இணையும் புதிய படத்தில் விஜய்க்கு Thalapathy 68 Villain வில்லனாக நடிக்க இரண்டு பெரிய நடிகர்களின் பெயர்கள் அடிபடுகிறதாம். வெங்கட் பிரபு மிகவும் ரகசியமாக வைத்திருந்தாலும் அவரது முந்தைய இரண்டு படங்களின் வில்லன்களில் ஒருவரைத்தான் எழுதி வைத்துள்ளார் என வெளியில் கசிந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் ரசிகர்களும், பட வெளியீட்டுக்கு காத்திருக்கிறார்கள். இந்த படத்தின் மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த படத்தைத் தொடர்ந்து விஜய், வெங்கட்பிரபு படத்தின் ஷூட்டிங் துவங்க இருக்கிறது.

வெங்கட்பிரபுவும் தளபதி விஜய்யும் எப்போது இணைவார்கள் என கடந்த 10 ஆண்டுகளாகவே எதிர்பார்ப்பு நிலவி வந்தது. மாநாடு படத்துக்கு பிறகு வெங்கட் பிரபுவுக்கு வேற லெவலுக்கு மார்க்கெட் எகிறிவிட்டது. இதனால் விஜய்யுடன் இணையும் படம் இப்போதே பல லாப கணக்குகளைப் போட ஆரம்பித்துவிட்டது. இதில் படத்தின் வில்லனுக்கும் பெரிய பங்கு இருக்கும் என்று கூறப்படுகிறது.

மெர்சல் படத்தில் ஏற்கனவே விஜய்க்கு வில்லனாக நடித்த எஸ் ஜே சூர்யாவை இந்த படத்தில் நடிக்க வைக்க யோசித்து வருகிறாராம் வெங்கட் பிரபு. எஸ்ஜே சூர்யாவுக்கும் விஜய்க்கும் நல்ல நட்பு இருப்பதால் நிச்சயமாக விஜய்க்கும் இதில் உடன்பாடு இருக்கும் என்றே தெரிகிறது.

தளபதி 68 படத்தில் விஜய், ஜோதிகா, பிரியங்கா மோகன் என இன்னும் பல நட்சத்திரங்கள் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. படத்தில் விஜய்க்கு எத்தனை கதாபாத்திரங்கள், விஜய்க்கு ஜோடி ஜோதிகாவா இல்லை பிரியங்காவா என ரசிகர்கள் இப்போதே பேச ஆரம்பித்துவிட்டனர். அதேநேரம் இதுகுறித்து அதிக விசயங்களை பேசக்கூடாது என முடிவெடுத்துள்ள தளபதி 68 படக்குழு முக்கியமாக இயக்குநர் வெங்கட் பிரபு வெளியில் வருவதையே நிறுத்திவிட்டாராம்.

ஒருவேளை எஸ்ஜே சூர்யாவும் படத்தில் இருந்தால், விஜய், ஜோதிகா, எஸ்ஜேசூர்யா என குஷி காம்போ வரும். அதேநேரத்தில் எஸ்ஜே சூர்யா இல்லாமல் இன்னொரு நடிகரிடமும் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறதாம். அது வேறு யாருமில்லை அரவிந்த் சாமிதான். கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி படத்தில் நடித்திருந்தார் அரவிந்த் சாமி.

விஜய்யும் அரவிந்த் சாமியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என ஆர்வமாக இருக்கிறாராம். அவரது தனி ஒருவன் படம் விஜய்க்கு மிகவும் பிடிக்கும் என்கிறார்கள். அவரும் சிறந்த வில்லனாக நடித்து அசத்துவார்.

எஸ் ஜே சூர்யா, அரவிந்த் சாமி ஆகிய இருவருமே நல்ல Thalapathy 68 Villain வில்லன்களாக இருப்பார்கள். மேலும் இந்த படத்தில் ஜெய் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ஒரேவேளை அவர்தான் வில்லனாக நடிப்பாரோ என்றும் சிலர் பேசி வருகின்றனர்.

Tags

Next Story