Thalapathy 68 Shooting எப்போது துவங்குது தெரியுமா?

Thalapathy 68 Shooting எப்போது துவங்குது தெரியுமா?
X
தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பது தெரியவந்துள்ளது. லியோ படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே படத்தின் பூஜை தொடங்கி ஷூட்டிங்கும் சென்றுவிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பது தெரியவந்துள்ளது. லியோ படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே படத்தின் பூஜை தொடங்கி ஷூட்டிங்கும் சென்றுவிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

விஜய்யுடன் இணையும் வெங்கட் பிரபு

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா ரசிகர்களே லோகேஷ் கனகராஜ், விஜய் இணைப்பில் உருவாகி வரும் லியோ பட வெளியீட்டுக்கு காத்திருக்கிறார்கள். இந்த படத்தின் மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து விஜய், வெங்கட்பிரபு படத்தில் நடிக்க இருக்கிறார்.

வெங்கட்பிரபுவும் தளபதி விஜய்யும் எப்போது இணைவார்கள் என கடந்த 10 ஆண்டுகளாகவே எதிர்பார்ப்பு நிலவி வந்தது. மாநாடு படத்துக்கு பிறகு வெங்கட் பிரபுவுக்கு வேற லெவலுக்கு மார்க்கெட் எகிறிவிட்டது. இதனால் விஜய்யுடன் இணையும் படம் இப்போதே பல லாப கணக்குகளைப் போட ஆரம்பித்துவிட்டது.

தளபதி 68 ல் ஜோதிகாவுடன் பிரியங்கா

திருமலை படத்துக்கு பிறகு விஜய் ஜோடியாக ஜோதிகாவை நடிக்க வைக்க திட்டம் போட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய் ஜோடியாக பிரியங்கா அருள் மோகனும் நடிக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் சமந்தா, தமன்னா, நயன்தாரா ஆகிய மூவரில் ஒருவர் நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில், படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு இதனை மறுத்திருந்தார். பின்னர் விரைவில் பல அப்டேட்டுகள் வரும் எனவும் அவை மிகப் பெரிய சர்ப்ரைஸாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

தளபதி 68 நடிகர்கள்

தளபதி 68 படத்தில் விஜய், ஜோதிகா, பிரியங்கா மோகன் என இன்னும் பல நட்சத்திரங்கள் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. படத்தில் விஜய்க்கு எத்தனை கதாபாத்திரங்கள், விஜய்க்கு ஜோடி ஜோதிகாவா இல்லை பிரியங்காவா என ரசிகர்கள் இப்போதே பேச ஆரம்பித்துவிட்டனர்.

தளபதி விஜய், வெங்கட் பிரபுவுடன் இணையும் புதிய படத்தில் விஜய் ஜோடியாக ஜோதிகா, பிரியங்கா மோகன் நடிக்க இருக்கிறார்களாம். மேலும் இந்த படத்தில் விஜய்க்கு தம்பியாக ஜெய்யும், வில்லனாக எஸ் ஜே சூர்யா அல்லது அரவிந்த் சாமி இருவரில் ஒருவர் நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜோதிகா தற்போது ஹிந்தியில் இரண்டு படங்களில் பிஸியாக இருக்கிறார். அவர் அக்டோபர் மாதத்திலிருந்து இந்த படத்தில் இணைவார் என்கிறார்கள். பிரியங்கா மோகன் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் ஜோடியாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க கேட்டிருக்கிறார்களாம்.

ஷூட்டிங் எப்போது?

தளபதி 68 படத்தின் மொத்த பட்ஜெட் 400 கோடி ரூபாயாம். அதில் விஜய்க்கு 150 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம். மேலும் மற்ற நடிகர்கள், கலைஞர்களுக்கு 50 கோடி ரூபாய் என தயாரிப்பு செலவு மட்டும் 200 கோடி ரூபாய் என்று திட்டமிட்டிருக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம். படப்பிடிப்பு வரும் அக்டோபர் 3ம் தேதியிலிருந்து துவங்கும் என்று தெரிகிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!