தளபதி 68 இயக்குநர், இசையமைப்பாளர், ஹீரோயின், வில்லன் யார் யார் தெரியுமா?

தளபதி 68 இயக்குநர், இசையமைப்பாளர், ஹீரோயின், வில்லன் யார் யார் தெரியுமா?
X
தளபதி 68 இயக்குநர், இசையமைப்பாளர், ஹீரோயின், வில்லன் - நீங்க தெரிஞ்சிக்க நினைக்குற எல்லா தகவல்களும் இங்கே!

தளபதி 68 படத்தைப் பற்றிய அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் காண்போம். இந்த பதிவில் என்னென்ன பார்க்க இருக்கிறோம் என்பதை அட்டவணையில் தெரிந்து கொள்வோம்.

Thalapathy 68 Release Date

Thalapathy 68 Poster

Thalapathy 68 Storyline

Thalapathy 68 Budget

Thalapathy 68 Cast & Crew

Thalapathy 68 Director

Thalapathy 68 Villain

Thalapathy 68 Heroines

Thalapathy 68 vijay salary

Thalapathy 68 shooting date

Frequently Asked Question

Thalapathy 68 Release Date

தளபதி 68 படத்தை வரும் 2024 ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை விருந்தாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். இருந்தாலும் படம் கொஞ்சம் தாமதமானால் ஜூன் அல்லது ஜூலை மாதத்துக்குள் வெளியிடுவார்கள் என்றே தெரிகிறது.

Thalapathy 68 Budget

தளபதி 68 படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய் என்று தெரியவந்துள்ளது. இதில் விஜய்க்கு 150 கோடியும் வெங்கட் பிரபுவுக்கு 10 கோடியும் சம்பளமாக கொடுக்கப்படும் என்றும் தெரிகிறது.

ஜோதிகாவுக்கு 3 கோடி ரூபாயும், பிரியங்காவுக்கு 2 கோடி ரூபாயும் கொடுக்கப்படவுள்ளதாக தகவல். எனினும் உறுதியான தகவல்களை விரைவில் அப்டேட் செய்கிறோம்.

Thalapathy 68 Cast & Crew

தளபதி 68 படத்தில்

நடிப்பு - விஜய், ஜோதிகா, பிரியங்கா அருள் மோகன்

இயக்கம் - வெங்கட் பிரபு

இசை - யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு - சக்தி சரவணன்

எடிட்டிங் - பிரவின் கே எல்

Thalapathy 68 Music Director

தளபதி விஜய், வெங்கட் பிரபுவுடன் இணையும் புதிய படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், இந்த படத்தில் தமன்னும் இருப்பதாக கூறப்படுகிறது. அப்படியென்றால் யுவன் என்ன செய்யப் போகிறார்.. ஒருவேளை இசை மட்டும் இவர், பாடல்கள் அவர் என இருக்குமோ என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

புதிய கீதை படத்துக்கு பிறகு விஜய் படத்துக்கு Thalapathy 68 Music Director யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும் யுவன் இசை என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் இந்த படத்தில் தமன்னும் இருப்பதாக வேறொரு தகவல் வெளியாகியிருக்கிறது.

தமன் இதுவரை விஜய்யுடன் இணைந்து வாரிசு படம் மட்டுமே பணிபுரிந்துள்ளார். யுவன் சங்கர் ராஜாவுக்கு இது இரண்டாவது படம் என்பது போல இந்த படத்தில் பணிபுரிந்தால் தமன்னுக்கும் விஜய்யுடன் இரண்டாவது படம். பின்னணி இசை பணிகளை யுவன் கவனிக்க பாடல்கள் தமன் உருவாக்க போகிறாரா அல்லது, ஒரு பாடல் மட்டும் பணிபுரிவாரா என்பது இதுவரை தெரியவில்லை. அதேநேரம் யுவன் சங்கர் ராஜாவிடம் தமன் உதவியாளராக பணிபுரிவார் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

Thalapathy 68 Villain

தளபதி விஜய், வெங்கட் பிரபுவுடன் இணையும் புதிய படத்தில் விஜய்க்கு Thalapathy 68 Villain வில்லனாக நடிக்க இரண்டு பெரிய நடிகர்களின் பெயர்கள் அடிபடுகிறதாம். வெங்கட் பிரபு மிகவும் ரகசியமாக வைத்திருந்தாலும் அவரது முந்தைய இரண்டு படங்களின் வில்லன்களில் ஒருவரைத்தான் எழுதி வைத்துள்ளார் என வெளியில் கசிந்துள்ளது.

மெர்சல் படத்தில் ஏற்கனவே விஜய்க்கு வில்லனாக நடித்த எஸ் ஜே சூர்யாவை இந்த படத்தில் நடிக்க வைக்க யோசித்து வருகிறாராம் வெங்கட் பிரபு. எஸ்ஜே சூர்யாவுக்கும் விஜய்க்கும் நல்ல நட்பு இருப்பதால் நிச்சயமாக விஜய்க்கும் இதில் உடன்பாடு இருக்கும் என்றே தெரிகிறது.

ஒருவேளை எஸ்ஜே சூர்யாவும் படத்தில் இருந்தால், விஜய், ஜோதிகா, எஸ்ஜேசூர்யா என குஷி காம்போ வரும். அதேநேரத்தில் எஸ்ஜே சூர்யா இல்லாமல் இன்னொரு நடிகரிடமும் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறதாம். அது வேறு யாருமில்லை அரவிந்த் சாமிதான். கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி படத்தில் நடித்திருந்தார் அரவிந்த் சாமி.

விஜய்யும் அரவிந்த் சாமியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என ஆர்வமாக இருக்கிறாராம்.

Thalapathy 68 Heroines

தளபதி விஜய், வெங்கட் பிரபுவுடன் இணையும் புதிய படத்தில் விஜய் ஜோடியாக ஜோதிகா நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இப்போது படத்தில் இளம் ஹீரோயின் ஒருவர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஜோதிகா, விஜய் ஜோடியாக நடிக்கிறாரா அல்லது இளம் நடிகைதான் ஹீரோயினா என்பது தெரியவில்லை.

முன்னதாக திருமலை படத்துக்கு பிறகு விஜய் ஜோடியாக ஜோதிகாவை நடிக்க வைக்க திட்டம் போட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய் ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க இருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து நடித்த பிரியங்கா மோகன் சூர்யாவுடனும் நடித்தார். இப்போது கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் ஜோடியாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க கேட்டிருக்கிறார்களாம்.

வேறு எந்த படங்களிலும் ஒப்பந்தம் ஆகாத நிலையில் கண்டிப்பாக விஜய் படத்துக்கு ஓகே சொல்லிவிடுவார் என்றே கூறுகிறார்கள். விஜய்க்கு ஜோடியாக யார் நடித்தாலும் அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி பக்காவாக செட் ஆகிவிடும். அந்த வகையில் விஜய்யுடன் பிரியங்கா மோகன் நடிக்கும் புதிய படமும் பக்காவானதாக இருக்கும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Thalapathy 68 vijay salary

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்க இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு இதுவரை பெறாத சம்பளம் கொடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. தளபதி 68 படத்தில் விஜய் 150 கோடி ரூபாய் சம்பளமாக பெறுவார் என்று தெரிகிறது.

Thalapathy 68 Poster

இதுவரை வெளியாகவில்லை. வெளியானதும் பதிவேற்றம் செய்கிறோம்.

Thalapathy 68 Storyline

இதுகுறித்த விவரங்களை வெளியிடுவதற்கு இது சமயம் அல்ல. முதலில் கதை முழுவதுமாக தயாராகி ஷூட்டிங் சென்ற பிறகே அதனை இறுதி செய்திருக்கிறார்களா இல்லையா என்பது தெரியவரும். அதனால் விரைவில் கதையை பதிவு செய்வோம்.

Thalapathy 68 shooting date

வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் படத்துக்கான ஷூட்டிங் துவங்கும் என்கிறார்கள். இதுவரை வந்த தகவலின் அடிப்படையில் வெங்கட் பிரபு தலைமையில் இயக்குநர் குழு படத்தின் முழுமையான கதையை வடிவமைத்திருக்கிறார்கள். விரைவில் விஜய் மற்றும் தயாரிப்பாளர்களிடம் கதையை கொடுத்து அதில் திருத்தம் இருந்தால் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Frequently Asked Question

Q1. ‘தளபதி 68’ படத்தில் விஜய்யுடன் யார் முக்கிய கதாபாத்திரத்தில் பணியாற்றுவார்கள்?

விடை ‘தளபதி 68’ படத்தில் ஜோதிகாவும், பிரியங்கா மோகனும் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.

Q2. தளபதி 68 படத்தின் இயக்குனர் யார்?

விடை ‘தளபதி 68’ படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.

Q3. ‘தளபதி 68’ படப்பிடிப்பு தொடங்கியுள்ளதா, எப்போது வெளியாகும்?

விடை‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 2023 இல் தொடங்கி விஜய்யின் பிறந்தநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Q4. விஜய் தற்போது எந்த படத்தில் நடித்து வருகிறார்?

விடை விஜய் நடித்து வரும் ‘லியோ’ படம் 19 அக்டோபர் 2023 அன்று வெளியாகிறது.

Q5. ‘தளபதி 68’ படத்தின் தலைப்பு என்ன?

விடை ‘தளபதி 68’ படத்தின் தலைப்பை இன்னும் இயக்குனரோ, தயாரிப்பு நிறுவனமோ வெளியிடவில்லை.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!