Thalapathy 68 Release Date பெருசா திட்டமிடும் AGS! VPக்கு கெடு!

Thalapathy 68 Release Date பெருசா திட்டமிடும் AGS! VPக்கு கெடு!
X
தளபதி 68 படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்பது ரசிகர்கள் அநேகம் பேர் தெரிந்துகொள்ள விரும்பும் ஒன்றாக இருக்கிறது.

தளபதி 68 திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் துவங்கி, அடுத்த 6 மாத காலம் நடைபெறும் எனவும் அதிலிருந்து இரண்டு மாதங்களில் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. Thalapathy 68 Release Date அநேகமாக படம் கோடை விடுமுறை விருந்தாக வெளியாகும் என்று தெரிகிறது.

தளபதி விஜய், வெங்கட் பிரபுவுடன் இணையும் புதிய படத்துக்கு தளபதி 68 என்று தற்காலிக பெயர் வைத்துள்ளனர். விஜய் ஜோடியாக இளம் ஹீரோயின் ஒருவர் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இப்போது Thalapathy 68 Jyothika ஜோதிகா படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஜோதிகா, விஜய் ஜோடியாக நடிக்கிறாரா அல்லது இளம் நடிகைதான் ஹீரோயினா என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ், விஜய் இணைப்பில் உருவாகி வரும் லியோ பட வெளியீட்டுக்கு தமிழ் சினிமா ரசிகர்களே காத்திருக்கிறார்கள். இந்த படத்தின் மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லியோ படத்தைத் தொடர்ந்து விஜய், வெங்கட்பிரபு படத்தில் நடிக்க இருக்கிறார்.

மங்காத்தா படத்துக்கு பிறகு ஒரு பேட்டியில் அந்த படத்தில் விஜய்யும் அஜித்தும் நடிக்க வேண்டியது என்பது போல தெரிவித்திருந்தார் வெங்கட்பிரபு. அன்றிலிருந்து அவரும் தளபதி விஜய்யும் எப்போது இணைவார்கள் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வந்தது. மாநாடு படத்துக்கு பிறகு வெங்கட் பிரபுவுக்கு வேற லெவலுக்கு மார்க்கெட் எகிறிவிட்டது. தெலுங்கு திரையுலகமே அவரை அழைத்து கதை கேட்க ஆரம்பித்தது. இந்நிலையில்தான், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் விஜய் படத்தை இயக்க வெங்கட் பிரபுவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

திருமலை படத்துக்கு பிறகு விஜய் ஜோடியாக Jyothika in Thalapathy 68 ஜோதிகாவை நடிக்க வைக்க திட்டம் போட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய் ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க இருப்பதாகவும் வேறொரு தகவல் வெளியாகியிருந்தது.

தளபதி 68 படத்தில் விஜய், ஜோதிகா, பிரியங்கா மோகன் என இன்னும் பல நட்சத்திரங்கள் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. படத்தில் விஜய்க்கு எத்தனை கதாபாத்திரங்கள், விஜய்க்கு ஜோடி ஜோதிகாவா இல்லை பிரியங்காவா என ரசிகர்கள் இப்போதே பேச ஆரம்பித்துவிட்டனர். அதேநேரம் இதுகுறித்து அதிக விசயங்களை பேசக்கூடாது என முடிவெடுத்துள்ள தளபதி 68 படக்குழு முக்கியமாக இயக்குநர் வெங்கட் பிரபு வெளியில் வருவதையே நிறுத்திவிட்டாராம்.

லியோ படத்தில் விஜய்யின் 90ஸ் பேரான திரிஷாவை இணைய வைத்திருந்தார் லோகேஷ் கனகராஜ். படம் வெளியாகும் போது வேற லெவலுக்கு வெறித்தனமாக இருக்கும். இந்நிலையில், விஜய் ஜோடியாக குஷி, திருமலை படங்களில் நடித்த ஜோதிகாவை மீண்டும் விஜய்யுடன் திரையில் காண ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

சூர்யாவுடனான காதல் திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்ட ஜோதிகா, பின்னர் கடந்த 2015ம் ஆண்டு 36 வயதினிலேயே படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.

மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகன் வந்தாள் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது காதல் தி கோர் எனும் மலையாள படத்தில் நடித்து முடித்துள்ளார். ஸ்ரீ மற்றும் பிளாக் மேஜிக் எனும் ஹிந்தி படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் தளபதி 68 படத்துக்கு பிறகு இவரது Thalapathy 68 Jyothika மார்க்கெட் மீண்டும் உயரும் என்று கூறப்படுகிறது.

இதனால் படம் பெரிய அளவில் திட்டமிட்டிருப்பது தெரிகிறது. Thalapathy 68 Release Date படத்தை விரைவில் எடுத்து கொடுத்து ரிலீஸ் செய்ய ஏஜிஎஸ் வெங்கட் பிரபுவுக்கு கெடு கொடுத்துள்ளதாம். விஜய் அக்டோபர் முதல் மார்ச் வரை கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் 2 கட்டங்களாக படத்தின் ஷூட்டிங் நடைபெறும் என்றும் தெரிகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!