Thalapathy 68 Heroine இவரா? அப்ப ஜோதிகா இல்லையா?

Thalapathy 68 Heroine இவரா? அப்ப ஜோதிகா இல்லையா?
X
தளபதி 68 படத்தில் யார் Thalapathy 68 Heroine ஹீரோயினாக நடிக்கப்போகிறார் என்கிற குழப்பம் நீடித்து வருகிறது.

தளபதி விஜய், வெங்கட் பிரபுவுடன் இணையும் புதிய படத்தில் விஜய் ஜோடியாக ஜோதிகா Thalapathy 68 Jyothika நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இப்போது படத்தில் இளம் ஹீரோயின் ஒருவர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஜோதிகா, விஜய் ஜோடியாக நடிக்கிறாரா அல்லது இளம் நடிகைதான் ஹீரோயினா என்பது தெரியவில்லை.

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா ரசிகர்களே லோகேஷ் கனகராஜ், விஜய் இணைப்பில் உருவாகி வரும் லியோ பட வெளியீட்டுக்கு காத்திருக்கிறார்கள். இந்த படத்தின் மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து விஜய், வெங்கட்பிரபு படத்தில் நடிக்க இருக்கிறார்.

வெங்கட்பிரபுவும் தளபதி விஜய்யும் எப்போது இணைவார்கள் என கடந்த 10 ஆண்டுகளாகவே எதிர்பார்ப்பு நிலவி வந்தது. மாநாடு படத்துக்கு பிறகு வெங்கட் பிரபுவுக்கு வேற லெவலுக்கு மார்க்கெட் எகிறிவிட்டது. இதனால் விஜய்யுடன் இணையும் படம் இப்போதே பல லாப கணக்குகளைப் போட ஆரம்பித்துவிட்டது.

திருமலை படத்துக்கு பிறகு விஜய் ஜோடியாக ஜோதிகாவை நடிக்க வைக்க திட்டம் போட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் Thalapathy 68 Priyanka Mohan விஜய் ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க இருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 68 படத்தில் விஜய், ஜோதிகா, பிரியங்கா மோகன் என இன்னும் பல நட்சத்திரங்கள் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. படத்தில் விஜய்க்கு எத்தனை கதாபாத்திரங்கள், விஜய்க்கு ஜோடி ஜோதிகாவா இல்லை பிரியங்காவா என ரசிகர்கள் இப்போதே பேச ஆரம்பித்துவிட்டனர். அதேநேரம் இதுகுறித்து அதிக விசயங்களை பேசக்கூடாது என முடிவெடுத்துள்ள தளபதி 68 படக்குழு முக்கியமாக இயக்குநர் வெங்கட் பிரபு வெளியில் வருவதையே நிறுத்திவிட்டாராம்.

சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து நடித்த பிரியங்கா மோகன் சூர்யாவுடனும் நடித்தார். இப்போது கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் ஜோடியாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் Vijay Priyanka Mohan விஜய் ஜோடியாக நடிக்க கேட்டிருக்கிறார்களாம்.

வேறு எந்த படங்களிலும் ஒப்பந்தம் ஆகாத நிலையில் கண்டிப்பாக விஜய் படத்துக்கு ஓகே சொல்லிவிடுவார் என்றே கூறுகிறார்கள். விஜய்க்கு ஜோடியாக யார் நடித்தாலும் அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி பக்காவாக செட் ஆகிவிடும். அந்த வகையில் விஜய்யுடன் பிரியங்கா மோகன் நடிக்கும் புதிய படமும் பக்காவானதாக இருக்கும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!