Thalapathy 68 Update பிரசாந்த் ஜீன்ஸ் பட லுக்ல வரப்போறாராம்..!

Thalapathy 68 Update பிரசாந்த் ஜீன்ஸ் பட லுக்ல வரப்போறாராம்..!
X
ஜீன்ஸ் பட லுக்கில் திரும்ப வரும் டாப் ஸ்டார் பிரசாந்த்.

தளபதி 68 படத்தில் நடிக்கும் பிரசாந்த், டி ஏஜிங் முறையில் ஜீன்ஸ் படத்தில் வரும் லுக்கில் வரப்போகிறாராம். விஜய் படம் என்றாலும் 3 கதாநாயகர்கள் நடிக்கும் ஒரு மல்டி ஸ்டாரர் படமாகவே இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தளபதி 68 திரைப்படத்தின் ஷூட்டிங் கடந்த அக்டோபர் 3ம் தேதி துவங்கி, அடுத்த 6 மாத காலம் நடைபெறும் எனவும் அதிலிருந்து இரண்டு மாதங்களில் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. Thalapathy 68 Release Date அநேகமாக படம் கோடை விடுமுறை விருந்தாக வெளியாகும் என்று தெரிகிறது. ஏப்ரல் 12 அல்லது 19 ம் தேதியில் படத்தை ரிலீஸ் செய்வது என முடிவில் இருக்கிறார்களாம்.

தளபதி விஜய், வெங்கட் பிரபுவுடன் இணையும் புதிய படத்துக்கு தளபதி 68 என்று தற்காலிக பெயர் வைத்துள்ளனர். விஜய் ஜோடியாக இளம் ஹீரோயின் ஒருவர் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இப்போது Thalapathy 68 Sneha ஜோதிகா படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சிநேகா, அப்பா விஜய் ஜோடியாக நடிக்கிறார் எனவும், 24 வயது மகன் விஜய்க்கு அம்மாவாக நடிக்கிறார் எனவும் கூறப்பட்டு வருகின்றது.

லியோவுக்கு பிறகு

லோகேஷ் கனகராஜ், விஜய் இணைப்பில் உருவாகி வரும் லியோ பட வெளியீட்டுக்கு தமிழ் சினிமா ரசிகர்களே காத்திருக்கிறார்கள். இந்த படத்தின் மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லியோ படத்தின் ரிலீசுக்கு முன்னரே விஜய், வெங்கட்பிரபு படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

மங்காத்தா படத்துக்கு பிறகு ஒரு பேட்டியில் அந்த படத்தில் விஜய்யும் அஜித்தும் நடிக்க வேண்டியது என்பது போல தெரிவித்திருந்தார் வெங்கட்பிரபு. அன்றிலிருந்து அவரும் தளபதி விஜய்யும் எப்போது இணைவார்கள் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வந்தது. மாநாடு படத்துக்கு பிறகு வெங்கட் பிரபுவுக்கு வேற லெவலுக்கு மார்க்கெட் எகிறிவிட்டது. தெலுங்கு திரையுலகமே அவரை அழைத்து கதை கேட்க ஆரம்பித்தது. இந்நிலையில்தான், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் விஜய் படத்தை இயக்க வெங்கட் பிரபுவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

யார் ஹீரோயின்

வசீகரா படத்துக்கு பிறகு விஜய் ஜோடியாக Sneha in Thalapathy 68 சிநேகாவை நடிக்க வைக்க திட்டம் போட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய் ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க இருப்பதாகவும் வேறொரு தகவல் வெளியாகியிருந்தது. அதாவது மகன் விஜய்க்கு ஜோடி இவர் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது பிரியங்கா மோகனுக்கு பதிலாக மீனாக்ஷி சவுத்ரி நடிப்பார் என்று கூறப்படுகிறது. கிளாமரான வேடம் என்பதால் இந்த மாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

2 முன்னணி நாயகர்கள்

தளபதி 68 படத்தில் இரண்டு முன்னணி நடிகர்களும் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் பிரசாந்த். டாப் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் 90களில் விஜய்யை விட பெரிய நடிகராக இருந்தார். இப்போது அந்தகன் படத்தில் நடித்து வரும் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு விழாவுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகிறார்.

இன்னொருவர் டான்ஸ் மாஸ்டர், இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா. இவரும் படத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பிரபுதேவா கமல்ஹாசன், பிரபு , அப்பாஸ் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்துள்ளார். இப்போது விஜய்யுடன் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இருவருக்கும் சைட் ரோல் என்றில்லாமல், விஜய்க்கு சமமான முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரங்கள் என்றும், ஆனால் படத்தில் குறைந்த நேரமே வரும் பாத்திரம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

டி ஏஜிங்

விஜய், பிரசாந்த், பிரபுதேவா மூவருக்குமே டி ஏஜிங் முறையில் அவர்களை 24 வயது காரர்களாக மாற்றும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக விஜய்யின் நண்பர்களாக பிரசாந்த், பிரபுதேவா இருவரும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்களாம். அதிலும் இவர்கள் இருவருக்கும் தலா ஒரு பாடல், ஒரு சண்டை எனவும் படத்தில் இருக்கிறதாம். இதனால் இது ஒரு டிரிபிள் ஹீரோ சப்ஜெக்ட் என கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!