தளபதி 68ல் டிவிஸ்ட்.... அவரு படத்துலயே இல்லையாம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தளபதி 68ல் டிவிஸ்ட்.... அவரு படத்துலயே இல்லையாம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
X
தளபதி 68 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. பலரும் நினைத்தது போல அந்த பிரபலம் படத்தில் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால், கோலிவுட்டில் விறுவிறுப்பாக பேசப்பட்டு வருகிறது.

தளபதி 68 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. பலரும் நினைத்தது போல அந்த பிரபலம் படத்தில் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால், கோலிவுட்டில் விறுவிறுப்பாக பேசப்பட்டு வருகிறது. | Thalapathy 68 Update

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் இன்றைய தேதிக்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகர் தளபதி விஜய்தான். அவரின் ஒவ்வொரு படங்களும் மிகப் பெரிய அளவில் பிசினஸ் செய்கின்றன. இதனால் அவரின் அனைத்து படங்களுக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துகொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது அவர் நடித்து வரும் லியோ படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் அனிருத் இசையமைக்கவில்லை, வெங்கட் பிரபுவின் ஆஸ்தான இசையமைப்பாளர் அவரின் தம்பி யுவன் சங்கர் ராஜாதான் இசையமைக்கவுள்ளார் என்பது தற்போது வெளியான தகவலின்மூலம் உறுதியாகியுள்ளது. | Thalapathy 68 Music Director

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் லியோ. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜோடு 3 படங்களாக பணியாற்றி வருகிறார். விஜய் ஜோடியாக திரிஷா, பிரியா ஆனந்த், அவர்களுடன் சஞ்சய் தத், கௌதம், மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், வரும் ஜூன் 15ம் தேதியுடன் விஜய் படத்திலிருந்து விடைபெறுவார் என்கிறார்கள். | | Thalapathy 67 actors

ஜூலை மாதத்திலிருந்து தளபதி 68 படம் துவங்கும் எனவும், அநேகமாக படப்பிடிப்பு உடனடியாக துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் இந்த வருடத்திலேயே அந்த படத்தையும் முடித்துவிட்டு 2024ம் ஆண்டு வேறு படத்துக்கு செல்வார் என்று திட்டமிடப்பட்டுள்ளதாம். | | Thalapathy 68 shooting start date

தளபதி 68 படத்தை முதலில் தெலுங்கு இயக்குநர் ஒருவர் இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் அடுத்து சுதா கொங்கரா, புஷ்கர் காயத்ரி என பலரது பெயர்களும் அடிபட்டன. ஆனால் கடைசியில் வெங்கட் பிரபு தான் விஜய் படத்தை இயக்கவுள்ளார் என்பது தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. | | Thalapathy 68 Director


வழக்கமாக வெங்கட் பிரபு தனது படங்களில் இசை பணியை கவனிக்க யுவன் சங்கர் ராஜாவையே கூட்டி வருவார். தெலுங்கில் கஸ்டடி படம் இயக்கும்போது கூட யுவன் சங்கர் ராஜாதான் இசை. ஆனால் விஜய், யுவன் சங்கர் ராஜா இணைந்த புதிய கீதை திரைப்படம் படுதோல்வி அடைந்தது. | | Thalapathy 68 Yuvan Shankar Raja

இதனால் அந்த செண்டிமென்டின் படி விஜய் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஒப்புக் கொள்ள மாட்டார் என்று சினிமா விமர்சகர்கள் பலர் கூறி வந்த நிலையில், அதை பொய் என நிரூபித்திருக்கிறது படக்குழு. யுவன் சங்கர் ராஜா இரண்டாவது முறையாக விஜய் படத்துக்கு இசையமைக்கப் போகிறார். இதனால் விஜய் ரசிகர்களும் இதனை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். | Vijay Yuvan Shankar Raja

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!