Thalapathy 68 Music Director கையோடு கூட்டி வந்த இயக்குநர்! விஜய் டபுள் ஓகே!

Thalapathy Music Director
X

Thalapathy Music Director

Thalapathy Music Director-தளபதி 68 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. இதில் விஜய்யுடன் முதல் முறையாக இணைந்துள்ளார் வெங்கட் பிரபு. அவரின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவையும் கையோடுக் கூட்டி வந்துவிட்டார்.

Thalapathy Music Director-தளபதி 68 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. இதில் விஜய்யுடன் முதல் முறையாக இணைந்துள்ளார் வெங்கட் பிரபு. அவரின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவையும் கையோடுக் கூட்டி வந்துவிட்டார். இந்நிலையில் அனிருத்துக்கு பதில் யுவனை எப்படி விஜய் தேர்ந்தெடுத்தார் என்பதே பலரின் ஆச்சர்யமாக இருக்கிறது. | Thalapathy 68 Music Update

தமிழ் சினிமாவில் அஜித், விஜய் படங்களுக்கு மிகப் பெரிய அளவில் பிசினஸ் இருக்கின்றது. இதனால் அவர்களின் அனைத்து படங்களுக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துகொண்டே இருக்கும். அந்த வகையில் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் லியோ படத்துக்கும், மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள விடாமுயற்சி படத்துக்கும் எதிர்பார்ப்பு வானளவ இருந்து கொண்டிருக்கிறது. விஜய் லியோ படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ள தளபதி 68 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. | Thalapathy 68 shooting start date

தளபதி 68 படத்துக்கு அனிருத்தான் இசை என பலரும் பேசி வந்தனர். அது 99 சதவிகிதம் உறுதியாகிவிட்டதாகவும் தெரிவித்தனர். ஆனால் இந்த படத்தில் அனிருத் இல்லை. வெங்கட் பிரபுவின் ஆஸ்தான இசையமைப்பாளர் அவரின் தம்பி யுவன் சங்கர் ராஜாதான் இசையமைக்கவுள்ளார் என்பது தற்போது வெளியான தகவலின் மூலம் உறுதியாகியுள்ளது. இந்த விசயத்தில் வெங்கட் பிரபு அடம்பிடிக்காவிட்டாலும் விஜய்யே யுவனுக்கு சரி சொல்லிவிட்டார் என்று கூறப்படுகிறது. | Thalapathy 68 Music Director

ஏற்கனவே லோகேஷ் கனகராஜின் லியோ படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். விஜய் படங்களுக்கு சமீப காலங்களாக ஏ ஆர் ரஹ்மான், அனிருத் இருவரும்தான் இசையமைத்து வருகிறார்கள். கடைசியாக வம்சி இயக்கத்தில் வாரிசு படத்துக்காக தமன் இசையமைத்திருந்தார். லியோ படத்தில் விஜய் ஜோடியாக திரிஷா, பிரியா ஆனந்த், அவர்களுடன் சஞ்சய் தத், கௌதம், மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், வரும் ஜூன் 15ம் தேதியுடன் விஜய் படத்திலிருந்து விடைபெறுவார் என்கிறார்கள். | | Thalapathy 67 actors

ஜூலை மாத இறுதியிலிருந்து தளபதி 68 படம் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அநேகமாக படப்பிடிப்பு ஜூலை 29ம் தேதி துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் இந்த வருடத்திலேயே அந்த படத்தையும் முடித்துவிட்டு 2024ம் ஆண்டு சம்மருக்கு தளபதி 68 படத்தை வெளியிடுவதில் உறுதியாக இருக்கிறாராம் விஜய். இந்நிலையில், தளபதி 68 படத்தில் விஜய் ஜோடியாக யார் நடிக்க இருக்கிறார்கள் என விஜய் ரசிகர்கள் இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள். | Thalapathy 68 release date

இந்நிலையில் மிருணாள் தாகூர், கீர்த்தி ஷெட்டி, சாய் பல்லவி என வெங்கட் பிரபு மனதில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. விஜய்யுடன் கலந்து ஆலோசித்துவிட்டு யார் நடிக்கிறார் என்பதை முடிவு செய்ய வாய்ப்பிருக்கிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!