Thalapathy 68 Yuvan இசைதான்... ஆனா படத்துல தமன்னும் இருக்காராம்!

Thalapathy 68 Yuvan இசைதான்... ஆனா படத்துல தமன்னும் இருக்காராம்!
X
தளபதி 68 Thalapathy 68 Music Director இசையமைப்பாளர் இவர்தான் ஆனா படத்துல இன்னொரு இசையமைப்பாளரும் இருக்கார்!

தளபதி விஜய், வெங்கட் பிரபுவுடன் இணையும் புதிய படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், இந்த படத்தில் தமன்னும் இருப்பதாக கூறப்படுகிறது. அப்படியென்றால் யுவன் என்ன செய்யப் போகிறார்.. ஒருவேளை இசை மட்டும் இவர், பாடல்கள் அவர் என இருக்குமோ என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

வெங்கட்பிரபுவின் தளபதி 68 படத்தில் விஜய் ஜோடியாக இளம் ஹீரோயின் ஒருவர் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இப்போது Thalapathy 68 Jyothika ஜோதிகா படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஜோதிகா, விஜய் ஜோடியாக நடிக்கிறாரா அல்லது இளம் நடிகைதான் ஹீரோயினா என குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா ரசிகர்களே லோகேஷ் கனகராஜ், விஜய் இணைப்பில் உருவாகி வரும் லியோ பட வெளியீட்டுக்கு காத்திருக்கிறார்கள். இந்த படத்தின் மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து விஜய், வெங்கட்பிரபு படத்தில் நடிக்க இருக்கிறார்.

வெங்கட்பிரபுவும் தளபதி விஜய்யும் எப்போது இணைவார்கள் என கடந்த 10 ஆண்டுகளாகவே எதிர்பார்ப்பு நிலவி வந்தது. மாநாடு படத்துக்கு பிறகு வெங்கட் பிரபுவுக்கு வேற லெவலுக்கு மார்க்கெட் எகிறிவிட்டது. இதனால் விஜய்யுடன் இணையும் படம் இப்போதே பல லாப கணக்குகளைப் போட ஆரம்பித்துவிட்டது.

புதிய கீதை படத்துக்கு பிறகு விஜய் படத்துக்கு Thalapathy 68 Music Director யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும் யுவன் இசை என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் இந்த படத்தில் தமன்னும் இருப்பதாக வேறொரு தகவல் வெளியாகியிருக்கிறது.

தமன் இதுவரை Thalapathy 68 Thaman விஜய்யுடன் இணைந்து வாரிசு படம் மட்டுமே பணிபுரிந்துள்ளார். யுவன் சங்கர் ராஜாவுக்கு Thalapathy 68 Yuvan இது இரண்டாவது படம் என்பது போல இந்த படத்தில் பணிபுரிந்தால் தமன்னுக்கும் விஜய்யுடன் இரண்டாவது படம். பின்னணி இசை பணிகளை யுவன் கவனிக்க பாடல்கள் தமன் உருவாக்க போகிறாரா அல்லது, ஒரு பாடல் மட்டும் பணிபுரிவாரா என்பது இதுவரை தெரியவில்லை. அதேநேரம் யுவன் சங்கர் ராஜாவிடம் தமன் உதவியாளராக பணிபுரிவார் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

இது மட்டுமின்றி தளபதி 68 படத்தில் விஜய், ஜோதிகா, பிரியங்கா மோகன் என இன்னும் பல நட்சத்திரங்கள் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. படத்தில் விஜய்க்கு எத்தனை கதாபாத்திரங்கள், விஜய்க்கு ஜோடி ஜோதிகாவா இல்லை பிரியங்காவா என ரசிகர்கள் இப்போதே பேச ஆரம்பித்துவிட்டனர். அதேநேரம் இதுகுறித்து அதிக விசயங்களை பேசக்கூடாது என முடிவெடுத்துள்ள தளபதி 68 படக்குழு முக்கியமாக இயக்குநர் வெங்கட் பிரபு வெளியில் வருவதையே நிறுத்திவிட்டாராம்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!