தளபதி 68 மற்றும் விடாமுயற்சி: மீண்டும் மோதப்போகும் விஜய் - அஜித்!

தளபதி 68 மற்றும் விடாமுயற்சி: மீண்டும் மோதப்போகும் விஜய் - அஜித்!
X
தளபதி 68 படமும் விடாமுயற்சி படமும் ஒரே நாளில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித்தின் இரண்டு புதிய படங்களும் ஒரே நாளில் வெளியாகி மீண்டும் மோத இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் ஒரே நாளில். இந்த இரு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீசாவதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தளபதி 68

தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் 2-ந் தேதி சென்னையில் தொடங்கியதுது. இப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் முதன்முறையாக வெங்கட் பிரபு - தளபதி விஜய் இணைந்துள்ளார்கள்.

லியோ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே, விஜய் தனது 68ஆவது படத்தை இயக்கப்போவது யார் என்பதை முடிவு செய்தார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முதன்முறையாக வெங்கட் பிரபுவும் விஜய்யும் இணைந்திருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. இதுமட்டுமின்றி அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பல வருடங்களுக்கு பிறகு விஜய்க்கு இசையமைக்கிறார்.

நட்சத்திர பட்டாளம்

தளபதி 68 படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம். அவருக்கு ஜோடியாக சினேகாவும் பிரியங்கா மோகனும் நடிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இவர்களில் அப்பா விஜய் - சினேகா ஒரு ஜோடி என்றும்; இள வயது விஜய் - பிரியங்கா மோகன் இன்னொரு ஜோடி என்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அநேகமாக டைம் டிராவல் கான்செப்ட்டைத் தான் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் என்கிறார்கள்.

கால பயணம் சாத்தியமா?

சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்ற விஜய் மற்றும் வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் ஹாலிவுட்டின் ஸ்டூடியோ ஒன்றுக்கு சென்றிருந்தனர். அங்கு விஜய்யின் முழு உடலும் ஸ்கேன் செய்யப்பட்டு தொழில்நுட்ப ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது என்று தகவல் வெளியானது. அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த வெங்கட் பிரபு எதிர்காலத்துக்கு வருக என்று கூறியிருந்தார். எனவே ஒருவேளை இது கால பயணம் குறித்த படமாக உருவாகுமோ என்றும் கேள்வி எழுந்திருக்கிறது.

எப்போது ரிலீஸ்?

இப்படத்தின் பூஜை கடந்த ஜூன் மாதமே நடந்திருக்க வேண்டியது. ஆனால் லியோ ரிலீஸுக்காக அது தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் லியோ படத்தின் பூஜை அக்டோபர் மாதம் முதல் வாரம் போடப்பட்டு கையோடு ஷூட்டிங்கும் கிளம்பிச் சென்றுவிட்டார்கள். இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விடாமுயற்சி

அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4-ந் தேதி துபாயில் தொடங்கி உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படம் ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் அஜித், ஹுமா குரேஷி, சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் தொடங்குவதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக ரிலீஸ் சமயத்தில் மோதிக்கொள்ளும் விஜய் - அஜித் படங்கள் தற்போது ஆரம்பத்திலேயே போட்டிபோட்டு தொடங்கப்பட உள்ளதால், இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எகிறி உள்ளது.

இந்த இரண்டு படங்களும் எப்போது ரிலீஸ் ஆகும் என்பதற்கான அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அநேகமாக அடுத்த ஆண்டு கோடை விடுமுறை தினங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், தமிழ் சினிமாவில் ஒரு புதிய மோதலுக்கு வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் - அஜித் படங்கள் மோதிக்கொள்வது ரசிகர்களுக்கு ஒரு விழாவாக பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகும் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு படங்களும் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!