Thalapathy 68 Heroine யாரு? 3 பேரிடம் பேச்சுவார்த்தை!

Thalapathy 68 Heroine யாரு? 3 பேரிடம் பேச்சுவார்த்தை!
X
தளபதி 68 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. இதில் விஜய் ஜோடியாக யார் நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பதால் ரசிகர்கள் யார் தளபதி 68 ஹீரோயின் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தளபதி 68 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. இதில் விஜய் ஜோடியாக யார் நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பதால் ரசிகர்கள் யார் தளபதி 68 ஹீரோயின் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். | Thalapathy 68 Heroine Update

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். அவரின் ஒவ்வொரு படங்களும் மிகப் பெரிய அளவில் பிசினஸ் செய்கின்றன. இதனால் அவரின் அனைத்து படங்களுக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துகொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்து வரும் லியோ படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. | Thalapathy 68 shooting start date

தளபதி 68 படத்துக்கு அனிருத்தான் இசை என பலரும் பேசி வந்தனர். அது 99 சதவிகிதம் உறுதியாகிவிட்டதாகவும் தெரிவித்தனர். ஆனால் இந்த படத்தில் அனிருத் இல்லை. வெங்கட் பிரபுவின் ஆஸ்தான இசையமைப்பாளர் அவரின் தம்பி யுவன் சங்கர் ராஜாதான் இசையமைக்கவுள்ளார் என்பது தற்போது வெளியான தகவலின் மூலம் உறுதியாகியுள்ளது. | Thalapathy 68 Music Director

ஏற்கனவே லோகேஷ் கனகராஜின் லியோ படத்துக்கும் அனிருத் இசையமைத்து வருகிறார். லோகேஷ் கனகராஜோடு 3 படங்களாக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். விஜய் ஜோடியாக திரிஷா, பிரியா ஆனந்த், அவர்களுடன் சஞ்சய் தத், கௌதம், மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், வரும் ஜூன் 15ம் தேதியுடன் விஜய் படத்திலிருந்து விடைபெறுவார் என்கிறார்கள். | | Thalapathy 67 actors

ஜூலை மாதத்திலிருந்து தளபதி 68 படம் துவங்கும் எனவும், அநேகமாக படப்பிடிப்பு உடனடியாக துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் இந்த வருடத்திலேயே அந்த படத்தையும் முடித்துவிட்டு 2024ம் ஆண்டு சம்மருக்கு தளபதி 68 படத்தை வெளியிடுவதில் உறுதியாக இருக்கிறாராம் விஜய். இந்நிலையில், தளபதி 68 படத்தில் விஜய் ஜோடியாக யார் நடிக்க இருக்கிறார்கள், மற்ற கதாபாத்திரங்களில் யார் யார் நடிக்கிறார்கள், எப்போது பூஜை, படப்பிடிப்பு துவங்கும் என விஜய் ரசிகர்கள் இப்போதே பல விசயங்களைப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். | Thalapathy 68 release date

அந்த வகையில் விஜய் ஜோடியாக இந்த படத்தில் நடிக்க 3 கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. வெங்கட் பிரபு தனது படத்தில் நடிக்க திரிஷாவைக் கேட்கலாம் என்று நினைத்தாராம் ஆனால் தற்போதுதான் விஜய் - திரிஷா இணைந்து நடித்திருக்கிறார்கள் என்பதால் அடுத்தடுத்த படங்களில் ஒரே நடிகையுடன் நடிக்க விஜய் ஒத்துக் கொள்வாரா தெரியவில்லை. | Vijay Trisha movies

இந்நிலையில் மிருணாள் தாகூர், கீர்த்தி ஷெட்டி, சாய் பல்லவி என வெங்கட் பிரபு மனதில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. விஜய்யுடன் கலந்து ஆலோசித்துவிட்டு யார் நடிக்கிறார் என்பதை முடிவு செய்ய வாய்ப்பிருக்கிறது. | Thalapathy 68 Sai Pallavi

Tags

Next Story