Thalapathy 68 Cast பிரசாந்த் மற்றும் பிரபுதேவா என்ன கதாபாத்திரங்கள் தெரியுமா?

Thalapathy 68 Cast பிரசாந்த் மற்றும் பிரபுதேவா என்ன கதாபாத்திரங்கள் தெரியுமா?
தளபதி 68 படத்தில் பிரசாந்த் மற்றும் பிரபுதேவா என்ன கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் தெரியுமா?

தளபதி 68 படம் குறித்த பல தகவல்கள் இணையதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் என்றாலும் இதனை விஜய் ரசிகர்கள் வரவேற்று வருகின்ற காரணத்தால் தொடர்ந்து இதுபோன்ற தகவல்கள் பரவி வருகின்றன.


தளபதி 68 திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் துவங்கி, அடுத்த 6 மாத காலம் நடைபெறும் எனவும் அதிலிருந்து இரண்டு மாதங்களில் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. Thalapathy 68 Release Date அநேகமாக படம் கோடை விடுமுறை விருந்தாக வெளியாகும் என்று தெரிகிறது.

தளபதி விஜய், வெங்கட் பிரபுவுடன் இணையும் புதிய படத்துக்கு தளபதி 68 என்று தற்காலிக பெயர் வைத்துள்ளனர். விஜய் ஜோடியாக இளம் ஹீரோயின் ஒருவர் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இப்போது Thalapathy 68 Jyothika ஜோதிகா படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஜோதிகா, விஜய் ஜோடியாக நடிக்கிறாரா அல்லது இளம் நடிகைதான் ஹீரோயினா என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

லியோவுக்கு பிறகு


லோகேஷ் கனகராஜ், விஜய் இணைப்பில் உருவாகி வரும் லியோ பட வெளியீட்டுக்கு தமிழ் சினிமா ரசிகர்களே காத்திருக்கிறார்கள். இந்த படத்தின் மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லியோ படத்தைத் தொடர்ந்து விஜய், வெங்கட்பிரபு படத்தில் நடிக்க இருக்கிறார்.

மங்காத்தா படத்துக்கு பிறகு ஒரு பேட்டியில் அந்த படத்தில் விஜய்யும் அஜித்தும் நடிக்க வேண்டியது என்பது போல தெரிவித்திருந்தார் வெங்கட்பிரபு. அன்றிலிருந்து அவரும் தளபதி விஜய்யும் எப்போது இணைவார்கள் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வந்தது. மாநாடு படத்துக்கு பிறகு வெங்கட் பிரபுவுக்கு வேற லெவலுக்கு மார்க்கெட் எகிறிவிட்டது. தெலுங்கு திரையுலகமே அவரை அழைத்து கதை கேட்க ஆரம்பித்தது. இந்நிலையில்தான், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் விஜய் படத்தை இயக்க வெங்கட் பிரபுவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

யார் ஹீரோயின்?

திருமலை படத்துக்கு பிறகு விஜய் ஜோடியாக Jyothika in Thalapathy 68 ஜோதிகாவை நடிக்க வைக்க திட்டம் போட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய் ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க இருப்பதாகவும் வேறொரு தகவல் வெளியாகியிருந்தது. ஜோதிகா நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் சிம்ரன் அல்லது சினேகாவை நடிக்க வைக்க திட்டமிடுகிறார்களாம்.

2 முன்னணி நாயகர்கள்

தளபதி 68 படத்தில் இரண்டு முன்னணி நடிகர்களும் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் பிரசாந்த். டாப் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் 90களில் விஜய்யை விட பெரிய நடிகராக இருந்தார். இப்போது அந்தகன் படத்தில் நடித்து வரும் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு விழாவுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகிறார்.


இன்னொருவர் டான்ஸ் மாஸ்டர், இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா. இவரும் படத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பிரபுதேவா கமல்ஹாசன், பிரபு , அப்பாஸ் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்துள்ளார். இப்போது விஜய்யுடன் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இருவருக்கும் சைட் ரோல் என்றில்லாமல், விஜய்க்கு சமமான முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரங்கள் என்றும், ஆனால் படத்தில் குறைந்த நேரமே வரும் பாத்திரம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


இதனால் படம் பெரிய அளவில் திட்டமிட்டிருப்பது தெரிகிறது. Thalapathy 68 Release Date படத்தை விரைவில் எடுத்து கொடுத்து ரிலீஸ் செய்ய ஏஜிஎஸ் வெங்கட் பிரபுவுக்கு கெடு கொடுத்துள்ளதாம். விஜய் அக்டோபர் முதல் மார்ச் வரை கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் 2 கட்டங்களாக படத்தின் ஷூட்டிங் நடைபெறும் என்றும் தெரிகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள்.

Tags

Next Story