ஒரு வாரம் பொறுத்துக்குங்க.....தளபதி 67 அப்டேட் வருது: லோகேஷ் கனகராஜ்

ஒரு வாரம் பொறுத்துக்குங்க.....தளபதி 67 அப்டேட் வருது: லோகேஷ் கனகராஜ்
X

பைல் படம்.

தளபதி விஜய் நடிக்கும் 67வது படத்தின் அப்டேட்டை பிப்ரவரி 1, 2 மற்றும் 3 எதிர்பார்க்கலாம் என இயக்குநர் லோகஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையம் அருகே அமைந்துள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமான "மைக்கேல்" பிப்ரவரி 3ம் தேதி வெளியாகவுள்ளது. அந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் லோகேஷ் கனகராஜ் பேசியபோது வருகின்ற பிப்ரவரி ஒன்று, இரண்டு, மூன்று, நாட்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.....அப்டேட் வருகிறது. இப்போதைக்கு அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும் என கல்லூரி மாணவர்கள் மத்தியில் தெரிவித்துடன் மாணவர்கள் விசில் அடித்தும், கரகோஷம் எழுப்பியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தமிழ் சினிமாவில் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பாக கருதப்பட்டு வரும் படம் தளபதி 67. படத்தின் முதற்கட்ட சூட்டிங் நடைபெற்று வருகிறது. படம் ஆரம்பிக்கும் முன்பே எக்கசக்க எதிர்பார்ப்பு படத்தின் மீது எழுந்துள்ளது. காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கடந்த படமான விக்ரம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்று, மாபெரும் வசூல் சாதனை படைத்திருந்தது.

அதேபோன்று விஜய் மற்றும் லோகஷ் கனகராஜின் கூட்டனியான மாஸ்டர் திரைப்படமும் கொரோனாவிற்கு பிறகு மக்களை தியேட்டர் நோக்கி படை எடுக்க வைத்தது. அதனைத் தொடர்ந்து தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் விஜய் வைத்து இயக்குவதால் அந்த படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


வாரிசு படம் வெளியான நாளிலிருந்தே தளபதி 67 அப்டேட் கேட்டு நெட்டிசன்கள் சமூக வலைதளங்களை அதிர விட்டு வருகின்றனர் தளபதி ரசிகர்கள். இந்த சூழலில் கோவைக்கு கல்லூரி நிகழ்வில் கலந்து கொள்ள வந்தபோது தளபதி 67 படம் குறித்து மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இயக்குனர் லோகேஷ் அளித்த பதில் மீண்டும் சமூக வலைத்தளத்தை புரட்டி போட்டுள்ளது என்றே சொல்லலாம்.

படத்திற்கு பெயர் மற்றும் படத்தின் டீசர் தயார் செய்துள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். தளபதி 67 அப்டேட் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!