விஜய் உடன் மீண்டும் ஜோடி சேரும் த்ரிஷா

விஜய் உடன் மீண்டும் ஜோடி சேரும் த்ரிஷா
X

thalapathy 67 update- நடிகர் விஜய் நடிக்கும் 67வது படத்தில் நடிக்கிறார் நடிகை த்ரிஷா (கோப்பு படங்கள்)

thalapathy 67 update- இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், 14 ஆண்டுகள் என்ற நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் - த்ரிஷா ஜோடியாக, நடிக்கின்றனர். ‘கில்லி’ படத்தை போல, இந்த படமும், விஜய் -த்ரிஷா ஜோடிக்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு, ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

thalapathy 67 update, cast of thalapathy 67, vijay thalapathy 67- தளபதி விஜய் நடித்துவரும் 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக, படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளனர்.

இந்நிலையில், 'தளபதி 67' திரைப்படத்தில் நடிக்கும் எட்டு நட்சத்திரங்களின் அதிரடி அறிவிப்புகள் வெளியான நிலையில் இந்த அறிவிப்பில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், நடிகை பிரியா ஆனந்த், நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர், பிரபல இயக்குனர் மிஷ்கின், நடிகர் மன்சூர் அலிகான், பிரபல நடிகர் மாத்யூ தாமஸ், பிரபல இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்ளனர்.


இந்நிலையில் 'தளபதி 67' படத்தின் அறிவிப்பு இன்றும் தொடரும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், த்ரிஷா இந்த படத்தில் இணைந்திருப்பதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். இதற்கு முன் விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து 'கில்லி' 'திருப்பாச்சி' 'ஆதி' மற்றும் 'குருவி' ஆகிய படங்களில் நடித்திருந்த நிலையில், 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் த்ரிஷா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படக்குழுவினர் இதற்கு முன் விஜய், த்ரிஷா நடித்த படங்களின் காட்சிகளை வீடியோவாக தொகுத்து வெளியிட்டுள்ள நிலையில், அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


'தளபதி 67' படத்தில் இணைவது குறித்து த்ரிஷா கூறியதாவது: எனக்குப் பிடித்த குழுவினர் மற்றும் அபாரமான திறமையான குழுவில் நானும் ஒரு பகுதியாக இணைய வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி, இனி வரும் காலங்கள் உற்சாகமானது' என்றும் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் - த்ரிஷா ஜோடி, கெமிஸ்ட்ரி தமிழ் சினிமாவில் நன்றாக இருந்தது. அந்த வகையில், 'கில்லி' படம், விஜய்க்கு திருப்புமுனை படமாக அமைந்தது. த்ரிஷாவின் நடிப்பு, பல பட வாய்ப்புகளை தொடர்ச்சியாக பெற்றுத் தந்தது. வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் பிரகாஷ் ராஜூக்கும் இந்த படம், பெயர் சொல்லும் வகையில் அமைந்தது. 'ஹாய் செல்லம்' என்ற அவரது டயலாக், பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.


'கில்லி' படத்தை அடுத்து, 'திருப்பாச்சி' படமும் விஜய் -த்ரிஷா ஜோடிக்கு வெற்றிப்படமாக அமைந்தது. ஆனால், 'ஆதி' மற்றும் 'குருவி' என இரு படங்களும், இந்த ஜோடிக்கு வெற்றிப்படமாக அமையவில்லை. படத்தின் கதை அம்சமும், படம் எடுக்கப்பட்ட விதமும், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை. எனவே, ரசிகர்களின் இந்த இரண்டு படங்களும் போதிய வரவேற்பை பெறவில்லை. ஆனாலும், விஜய் -த்ரிஷா ஜோடி இந்த படத்திலும், ரசிகர்களால் அதிகமாக ரசிக்கப்பட்டது.


கடந்த 14 ஆண்டுகளில், விஜயை போலவே, த்ரிஷாவும் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நாயகி உயர்ந்தார். அதுவும் '96' படம், அதிக கவனம் ஈர்த்தது. சமீபத்தில், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' பாகம் 1ல், குந்தவை கேரக்டரில் நடித்த த்ரிஷா, பலத்த கவனத்தை ஈர்த்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!