பீஸ்ட் ஹீரோ விஜயின் அடுத்த படம் வம்சியுடன் தளபதி 66.

பீஸ்ட் ஹீரோ விஜயின் அடுத்த படம் வம்சியுடன் தளபதி 66.
X
தளபதி 66 திரைப்பபடத்தில் விஜயுடன் நடிகர் சரத்குமார் இப்படம் மூலம் நடிகர் விஜய் உடன் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ளார்

தளபதி 66 திரைப்பபடத்தில் விஜயுடன் நடிகர் சரத்குமார் இப்படம் மூலம் நடிகர் விஜய் உடன் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ளார்.

பீஸ்ட் ஹீரோ விஜய் அடுத்தாப்லே வம்சியுடன் இணைஞ்சு உருவாக்கி வரும் படம் தளபதி 66. தில் ராஜு தயாரிக்கும் இப்ப்டத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் நடிகர் சரத்குமார் இப்படம் மூலம் நடிகர் விஜய் உடன் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ளார். தளபதி 66 படத்தின் முதல் ஷெட்யூம் ஹைதராபாதில் முடிஞ்ச நிலையில் விஜய் பெப்சி டீமுக்காக கேட்டுக் கொண்டதற்கு இணங்க சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருது.

இப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிக்க முதலில் பிரசாந்த்திடம் படக்குழு அப்ரோச் பண்ணினாய்ங்க. அவர் நடிக்க மறுத்துட்டதால், நடிகர் மைக் மோகனை காண்டாக்ட் செஞ்சாய்ங்க . தற்போது அவரும் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுது.

அவர்கள் இருவரும் நடிக்க மறுத்ததற்கான காரணம் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் பிரசாந்த் நீண்ட இடைவெளிக்கு பின் அந்தகன் என்கிற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதையடுத்தும் ஹீரோவாக நடிக்கவே பிரசாந்த் விரும்புவதால் அவர் அண்ணன் ரோலில் நடிக்க 'நோ' சொல்லிவிட்டாராம்.

அதேபோல் நடிகர் மோகன் இப்படத்தில் நடிக்க கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அவரும் இப்படத்தில் நடிக்கவில்லை என்பதை சமீபத்திய பேட்டியில் கன்பார்ம் செய்துள்ளார். அவர் தற்போது ஹரா என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதில் நடித்து முடித்த பின்னரே தனது அடுத்த படம் குறித்து முடிவெடுக்க உள்ளதாக மோகன் தெரிவிச்சிருக்காராம்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!