Thalaivar 171 மாஸான அப்டேட்.. ஷூட்டிங் டூ ரிலீஸ் தேதி இதுதானாம்!

Thalaivar 171 மாஸான அப்டேட்.. ஷூட்டிங் டூ ரிலீஸ் தேதி இதுதானாம்!
X
தலைவர் 171 படத்தின் ஷூட்டிங் துவங்கும் நாள் முதல் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது வரை

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் 10ம் தேதி ரிலீசான ஜெயிலர் படம் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்று 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது. இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய மகள் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த், தற்போது ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைவர் 171 படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணையவுள்ளார் சூப்பர்ஸ்டார்.

ஜெயிலர் பட வெற்றி

ஜெயிலர் படத்தில் ரிடையர்ட் ஜெயிலராக நடித்திருந்த ரஜினிகாந்த், தனது அற்புதமான நடிப்பு மற்றும் அசத்தலான ஆக்‌ஷன் காட்சிகளால் ரசிகர்களை கவர்ந்தார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி சர்வதேச அளவில் வெற்றி பெற்றது.650 கோடிகளுக்கும் அதிகமான வசூலைப்பெற்ற திரைப்படம் இது. கிட்டத்தட்ட விக்ரம் படத்தின் கதையைத் தழுவி அதேபோல ஒரு படத்தை எடுத்திருப்பதாக இணையதளத்தில் அனைவருமே கலாய்த்து தொங்கவிட்டனர். ஆனாலும் படம் நல்ல வரவேற்பை பெற்றது என விளம்பரம் செய்தார்கள்.

பிரபல அரசியல்வாதி ஒருவர் இந்த படத்தை நேற்றிரவு பார்த்தேன் பார்த்ததற்கு அந்த படத்தின் தயாரிப்பாளர் எனக்கும் ஒரு காரை பரிசளித்திருக்கவேண்டும் என கலாய்க்க அதனை இணைய உலகமே கேலியாக பகிர்ந்து சந்தோஷப்பட்டது. சிலர் இதனை பிளாக் மணியை ஒயிட்டாக செய்த செயல்கள் என்றும் குறிப்பிட்டனர்.

ரஜினியின் 2023-2024 படங்கள்

ஜெயிலர் (2023)

லால் சலாம் (2023)

தலைவர் 170 (2024)

தலைவர் 171 (2024)

ரஜினிகாந்தின் இந்தப் புதிய படங்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

லால் சலாம் படம்

ஜெயிலர் படத்தை தொடர்ந்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தில் முக்கியமான கேமியோ ரோலில் நடித்துள்ளார் ரஜினி. கிரிக்கெட் சம்பந்தப்பட்ட இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

படத்தில் ரஜினிகாந்த் இடம்பெற்ற காட்சிகள் அனைத்தும் படம்பிடிக்கப்பட்டுவிட்ட நிலையில், எஞ்சியுள்ள காட்சிகளும் முடிக்கப்பட்டு இப்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

அமெரிக்க பயணம்

ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினிகாந்த் தனது சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு பயணம் செய்யவுள்ளார். இந்த பயணம் நவம்பர் மாதம் தொடங்கி ஒரு மாதம் வரை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பயணத்தால் ஞானவேல் படத்தின் சூட்டிங் பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தலைவர் 170 படம்

லால் சலாம் படத்தை தொடர்ந்து டிஜே ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் இந்தப் படம் வரும் 2024ம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் படம் எப்போது?

இதனிடையே கமல்ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் இயக்க ரஜினிகாந்த் நடிப்பதாக இருந்த ஒரு ஸ்க்ரிப்டில் முதலில் ரஜினி நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டார். பின் விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கதையில் நடிக்க அவரே விரும்பி அழைத்து சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் துவங்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் தலைவர் 171 படத்துக்கான கதையை இறுதி வடிவம் செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபடுவார் என்றும் அதற்காக லோகேஷ் கேட்ட எல்லாவற்றையும் கொடுக்க தனி டீம் ஒன்றை கொடுத்திருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!