ரஜினியும் கமலும் ஒரே படத்தில்...! லோகேஷின் அதிரடி பிளான்!

ரஜினியும் கமலும் ஒரே படத்தில்...! லோகேஷின் அதிரடி பிளான்!
X
கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் ஒரே படத்தில் இணைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 171 படம், லோகேஷ் கனகராஜின் எல்சியூ (Lokesh Cinematic Universe) திரைப்பட வரிசையின் ஒரு பகுதியாக இருக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அப்படியென்றால் ரஜினியும் கமலும் ஒரே படத்தில் இணைந்து நடிப்பார்களா என ரசிகர்கள் ஆர்வமாகியுள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் எல்சியூவாக இருக்குமா என்ற விவாதங்கள் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கின்றன. லியோ கிளைமாக்ஸில் ரோலக்ஸ் சூர்யா, பகத் ஃபாசில், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கேமியோவில் வருவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், லியோ திரைப்படம் எல்சியூவாக இருக்காது, இது ஒரு ஸ்டாண்ட் அலோன் கேங்ஸ்டர் திரைப்படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஒருபக்கம் அப்படி கூறினாலும் இன்னொரு பக்கம் ஸ்டாண்ட் அலோன் படமாக இருந்தால் இந்நேரம் வெளிப்படுத்தியிருப்பார்கள் எல்சியூ என்பதாலேயே இப்போது வரை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள் என்றும் சிலர் கூறி வருகின்றனர். மற்ற யார் இல்லாவிட்டாலும் கமல்ஹாசன் கேமியோ வரும் எனவும் எதிர்பார்க்கிறார்கள்.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் சன்பிக்சர்ஸ் மீது அதிருப்தியில் இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. லியோ படமே வராத நிலையில் அவசரப்பட்டு அடுத்த படத்தின் அப்டேட்டை வெளியிட்டுவிட்டார்களே என வருத்தத்தில் இருக்கிறாராம். ஏற்கனவே ரஜினியின் 170வது படமே இன்னும் துவங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அறிவிப்பு வந்ததுதான் தாமதம், தலைவர் 171 திரைப்படம் எல்சியூவாகத்தான் இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. கமல்ஹாசனின் விக்ரம் படத்தை போலவே, ரஜினிகாந்தின் தலைவர் 171 திரைப்படம் ஒரு மல்டி ஸ்டார்டர் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவானாலும், எல்சியூவுக்குள் தலைவர் 171 வரும் என்று உறுதியாக கூறுகின்றனர். லோகேஷ் கனகராஜின் பக்கா பிளான் அதுதான் என்றும், இந்தப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனையும் உள்ளே கொண்டு வரும் திட்டத்தையும் லோகேஷ் கனகராஜ் வைத்திருக்கிறார் என்றும் சினிமா பிரபலங்கள் கிளப்ப ஆரம்பித்துள்ளனர்.

லியோ திரைப்படம் ரிலீஸானால் தான் இதனை முழுவதுமாக உறுதி செய்ய முடியும் என்றும், அந்தப் படம் எல்சியூவாக இருந்தால், கண்டிப்பாக தலைவர் 171 படமும் எல்சியூவாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கும் என்றும் கூறுகின்றனர். தலைவர் 170 படம் தான் இப்போதைக்கு ரஜினியின் மெயின் ஃபோகஸ் என்றும், அந்த படம் முடியும் போது தான் லோகேஷ் கனகராஜ் முழு கதையே முடித்து தலைவர் 171 படத்தை ஆரம்பிப்பார் என்றும் கூறுகின்றனர்.

தலைவர் 171 திரைப்படம் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் படமாக இருந்தால் நல்லா இருக்கும் என்பது தான் பலரது விருப்பமாக உள்ளது. கோலிவுட்டிலும் அவெஞ்சர்ஸ் படம் போல ஒரு படத்தை லோகேஷ் கனகராஜ் கொடுப்பதற்கான சரியான வாய்ப்பு இது என்று கூறுகின்றனர்.

தலைவர் 171 திரைப்படம் எல்சியூவாக இருக்கும் என்றால், அது கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றை உருவாக்கும். ஒரு திரைப்பட இயக்குநர், தனது இரண்டு படங்களை ஒரு பெரிய திரைப்பட வரிசையாக இணைப்பது இதுவே முதல் முறையாக இருக்கும்.

இந்த தகவல்கள் உறுதியாகவில்லை, ஆனால் அவை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கமல்ஹாசன், ரஜினிகாந்த், சூர்யா, விஜய், கார்த்தி என தமிழின் முன்னணி நடிகர்கள் ஒரு படத்தில் இணைவதால், அது ஒரு மகாகாவியம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!