இந்தியாவே ஆட்டம் காணும்... அமிதாப் பச்சன், ரஜினியுடன் தமிழில் இணையும் மாஸ் நடிகர்!

இந்தியாவே ஆட்டம் காணும்... அமிதாப் பச்சன், ரஜினியுடன் தமிழில் இணையும் மாஸ் நடிகர்!
X
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் அமிதாப் பச்சன் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர்களுடன் மாஸ் நடிகர் ஒருவரும் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் அமிதாப் பச்சன் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர்களுடன் மாஸ் நடிகர் ஒருவரும் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெய்லர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. டப்பிங் வேலைகள் தற்போது துவங்கியுள்ளன. ரஜினிகாந்துடன் இந்த படத்தில் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெரோஃப் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

இதேநேரம் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்திலும் ரஜினிகாந்த் போர்சன்களின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த படத்தைத் தொடர்ந்து த செ ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக கூறப்பட்டு வருகிறது. இந்த படம்தான் ரஜினிகாந்தின் கடைசி படம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜுடன் ரஜினிகாந்த் இணையும் புதிய படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கிறார் என்று கூறப்பட்டது. இருவரும் இந்திய சினிமாவின் மிகப் பெரிய ஆளுமைகள் என்பதால் இருவரும் இணையும் இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதேநேரம் இப்போது இந்த படத்தில் ரஜினிகாந்துடன் யாஷும் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து ரஜினிகாந்தும் இந்த மாதிரி ஒரு வெற்றியைப் பெற திட்டமிட்டு வருகிறார். அந்த படத்துக்காக இந்தியா முழுக்க அனைவருடனும் நடித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறாராம். அடுத்து டாம் குரூஸ் மாதிரி ஹாலிவுட் நடிகர்களை படத்தில் எடுத்து போடுவாரோ என இணையத்தில் கலாய்த்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!