நடிகை த்ரிஷாவுக்கு ஜாக்பாட்டாக தல, தளபதி படங்கள்
நடிகை த்ரிஷா
Trisha Latest News- தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை த்ரிஷா. கடந்த 1983ம் ஆண்டு பிறந்த த்ரிஷாவுக்கு தற்போது வயது 39 ஆகிறது. ஆனாலும் இன்னும் இளமையுடனே காண்போரை கவர்ந்து வருகிறார்.
நடிகை த்ரிஷா மிஸ் சென்னை போட்டியில் வென்ற பின், அவர் மீது கவனத்தை ஈர்த்து திரைப்படத் துறையில் நுழைவதற்கு வித்திட்டது. முதன்மையாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த அவர், அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்ததற்காக தென்னிந்தியாவின் ராணி என்று அடிக்கடி குறிப்பிடப்பட்டார் . தி டைம்ஸ் ஆஃப் இந்தியா மூலம் தென்னிந்தியாவின் சிறந்த நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
trisha latest news
1999 ஆம் ஆண்டு தமிழில் ஜோடி படத்தில் துணை வேடத்தில் தோன்றினார். 2002 ஆம் ஆண்டு வெளிவந்த மௌனம் பேசியதே திரைப்படத்தில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து, சாமி (2003), கில்லி (2004) மற்றும் ஆறு (2005) ஆகிய வெற்றிப் படங்களிலும், தெலுங்கு சினிமாவில் வர்ஷம் (2004), நுவ்வொஸ்தானந்தே நேனோடண்டனா ( 2005) மற்றும் அத்தாடு ( 2005) ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றார். இதனைத்தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை தன்பக்கம் இழுந்துள்ளார்.
தற்போது மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் குந்தவைபாத்திரத்தில் நடித்திருந்தார் த்ரிஷா. ரசிகர்கள் மத்தியில் அவர் பாத்திரத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பிற்குப்பின் அவர் வெளிநாடுகளுக்கு சுற்றுலாசென்றிருந்தார். அப்போது அவரது காலில் காயம் ஏற்பட்ட புகைப்படங்களை தனது சமூகவலைதளப் பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.
காயம் காரணமாக வலி இருந்து வந்ததால், வெளிநாட்டு சுற்றுலாவை பாதியில் நிறுத்திவிட்டு சென்னை திரும்பினார். இதனைத்தொடர்ந்து அவர் 'பொன்னியின் செல்வன்' படக் குழு நடத்திய பார்ட்டியில் கலந்துகொண்டார்.
trisha latest news tamil
இதனிடையே நடிகர்கள் அஜித் மற்றும் விஜய்யின் திரைப்படங்கள் பல வருடங்களுக்கு பிறகு ஒரே சமயத்தில் வெளியாக இருக்கிறது. அதன்படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் மோதுகின்றன.
இந்நிலையில் இப்படங்களை தொடர்ந்து விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரின் 67-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் 62வது படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் அந்த இரண்டு திரைப்படங்களிலும் நடிகை த்ரிஷா தான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி தளபதி 67-ல் விஜய்க்கு மனைவியாக த்ரிஷா நடிக்க உள்ளதாகவும், அதேபோல் அஜித்தின் 62-வது திரைப்படத்தில் நயன்தாரா இல்லை, திரிஷா தான் கதாநாயகியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu