விஜய்க்கு வில்லனாக நடிக்க போகும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுன்
நடிகர் நாகார்ஜுனா.
Vijay Thalapathy New Movie -தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர் விஜய் நடித்து வெளி வர உள்ள அவரது ௬௭வது படம் தளபதி 67 என பெயரிடப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள தளபதி 67படத்தில் மொத்தம் ஆறு வில்லன்கள் என்று தகவல் வெளியானது.
அதில், சஞ்சய் தத் மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். அவர்களை தொடர்ந்து மூன்றாவது வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது.மேலும், நான்காவது வில்லனாக விஜய் சேதுபதியும், ஐந்தாவது வில்லனாக கவுதம் மேனனிடம் படக்குழு பேசி வருகிறார்களாம். இந்நிலையில், தளபதி 67 படத்தின் ஆறாவது வில்லனாக தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா நடிக்கப்போவதாக திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu