தமிழ் சினிமாவில் தெலுங்கு ஹீரோக்கள் ஆட்டம் தற்போது அதிகமாகிறது

தமிழ் சினிமாவில் தெலுங்கு ஹீரோக்கள் பலர் தங்களது மார்க்கெட்டை அதிகப் படுத்திக்கிட்டிருக்காய்ங்க. டோலிவுட் ஆர்டிஸ்ட் தமிழ்நாட்டுக்கு வந்து தங்கி அவங்க படத்தை இங்கே புரமோஷன் செய்கிறார்கள். அதன்மூலம் அவர்கள் தங்களது மார்க்கெட்டை, தமிழிலும் தக்கவைத்துக் கொள்றாய்ங்க.
அதிலும் குறிப்பாக பெரிய டைரக்டர், பெரிய பட்ஜெட் பான் இந்தியா படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். தெலுங்கில் இருந்து ஒரு பெரிய பட்டாளமே தமிழகம் வந்து எவ்வளவு முடியுமோ, அந்த அளவிற்கு படத்தின் பிரமோஷன் வேலைகளை செஞ்சிடுராய்ங்க
தற்போது ராஜமௌலியின், ஆர்ஆர்ஆர் போன்ற படங்களையும், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஸ்பா படத்தையும் தமிழகத்தில் ரிலீஸ் செய்து செம கல்லா கட்டியுள்ளனர். இதற்கு காரணம் அவர்கள் படத்திற்கு முன்னரே இங்கே வந்து அந்தப் படத்தின் ப்ரோமோஷனை வெற்றிகரமாக நடத்தியது தான்.
இதுனாலேயே தற்சமயம் தெலுங்கு திரையுலகம் தமிழில் கொடி கட்டிப் பறந்து வருகிறது. அங்கே கிடைக்கும் லாபத்தை அப்படியே இங்கேயும் பார்த்து விடுகிறது. எல்லா மாநிலத்தில் இருந்தும் ஒவ்வொரு நடிகரை தேர்ந்தெடுக்கிறார்கள். இவ்வாறு செய்வதால் தங்கள் மார்க்கெட்டை அனைத்து மொழிகளிலும் வளர்த்து விடுகின்றனர்.
ஆனா ரஜினி, கமல் போன்றவர்கள் பான் இந்திய படங்களில் அதிக விருப்பம் காட்டுவதில்லை. தற்போது விஜய் நடித்து வெளிவர இருக்கும் பீஸ்ட் படம் பான் இந்தியா படம் என்றாலும் ஏனைய மாநிலங்கள் போய் புரோமோசன் செய்ய முன்வாராதது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu