சினிமாவில் படத்தை விற்கவோ இல்ல ரிலீஸ் பண்ணவோ மீடியட்டர்கள்தான்-சோகக்கதை

சினிமாவில் படத்தை விற்கவோ இல்ல ரிலீஸ் பண்ணவோ மீடியட்டர்கள்தான்-சோகக்கதை
X
வர்ற மாசம் ஓடிடியில் என்னென்ன படம் வெளியாகப்போவுது தெரியுமா? #இன்ஸ்டாநியூஸ் வாசகர்களுக்காக சினிமா சண்டே அப்டேட்..

வர்ற மாசம் ஓடிடியில் தனுஷின் ஜெகமே தந்திரம்,சிவகார்த்திகேயனின் டாக்டர், விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார், ஆக்டர்(?) சிவாவின் சுமோ - ஆகிய தமிழ் படங்க வெளியாகப் போறதா நம்ம செய்திப்பிரிவுல உள்ள உளவுத்துறை சேதி சொல்லிட்டு இவர்கிட்ட கேளுங்க அப்படின்னு சொன்ன ஆளுகிட்ட கேட்டு சொல்லப்போற சங்கதி தான் இந்த சேதி நம் பார்வைக்கு இதோ #இன்ஸ்டாநியூஸ் வாசகர்களுக்காக..

கோலிவுட்டுல காலங்காலமாகத் தொடரும் வேதனை இன்னாது அப்படின்னு கேட்டாக்க...லோ பட்ஜெட் படங்கள்.''குறைஞ்ச செலவுல ரெடி செஞ்ச படம்னாலே தியேட்டர்கள் ரிலீஸ் செய்ய தயங்கறாய்ங்க. அதையும் மீறி ரிலீசானாக்கூட ஒரு ஷோதான் எங்களுக்கு கெடைக்குது. அதுவும் மார்னிங் அல்லது நூன் ஷோதான். ஈவினிங் ஷோ கிடைப்பது குதிரைக்கொம்பா தான்இருக்குது...'' அப்படீங்கற பொலம்பலை சினிமா தொடங்கிய நாள் முதல் நாங்க எல்லாரும் கேட்கிறோம்.

இப்போ டெக்னாலஜி எல்லாம் தாறுமாறா வளர்ந்து ஏகப்பட்ட ஓடிடி ப்ளாட்ஃபார்ம் வந்திருக்கிறது. ''இதுலயும் எங்க படங்களை வாங்க ஆளில்லை...'' என கதறுகிறார்கள் லோ பட்ஜெட் தயாரிப்பாளர்கள். இந்த வருசம் ஜனவரியில் ஆரம்பித்து ஏப்ரலில் துவங்கிய லாக்டவுனுக்கு முன்னர் - அதாவது தியேட்டர்கள் மூடும் வரை லாஸ்ட் ஃபோர்(4) மன்த் -தில(மாதம்) மட்டும் 60 லோ பட்ஜெட் படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகியிருக்குது. அம்புட்டும் வந்த வேகத்தில் போன இடம் தெரியாமல் காணாமல் போனது தனிக்கதை. ஆனா இப்ப வரை ரிலீஸுக்கு ரெடியாக கிடப்பில் இருக்கும் லோ பட்ஜெட் படங்கள் கொறஞ்சது ஐநூறைத் தாண்டும் என்ற புள்ளிவிவரம் கொஞ்சம் மெர்சலத்தான் கொடுக்குது..

அதே சமயம் இன்னொரு புரொடியூசர் 'முன்னாடியெல்லாம் தியேட்டர்கள்ல ரிலீஸ் பண்ணும்போது 'நீங்க ப்ரீ டிஸ்ட்ரிபியூஷன் கொடுங்க. ஓடினா காசு எடுத்துக்குங்க'னு சொல்லி படத்தை வாங்கி ரிலீஸ் பண்ணுவாங்க.

அதையேதான் இப்ப ஓடிடியிலும் பண்றாங்க. 'நீங்க கொடுக்கற கன்டன்டை ஓடிடியில் போட்டு விடுறோம். என்ன ஷேர் வருதோ அதை எடுத்துக்குங்க'னு சொல்லிடுறாய்ங்க' என்றும் சொல்கிறார்

இது பத்தி 'இப்பல்லாம் போன்லேயே முழு சினிமா எடுக்குமளவு டெக்னாலஜி ஈசி ஆனதாலே லோ பட்ஜெட் படங்களைத் தயாரிக்கறது ஈசியா இருக்கு. ஆனா, அப்படித் தயாராகிற லோ பட்ஜெட் படங்களோட கன்டன்ட் ஆடியன்ஸை ஈர்க்கறதில்ல அது வேற கீது. அதே சமயம் கன்டன்ட் இருக்கற படங்களை ஓடிடியில் வாங்கறாய்ங்க' அப்படீன்னு சொன்னாரம் சி வி குமார்

இதை எல்லாம் கேட்ட இன்னொரு புரொடியூசர் 'ஓடிடியில் 'வி1', 'அந்தகாரம்' படங்களை வாங்கி வெளியிட்டதற்குக் காரணம் அதோட கன்டன்ட். கதையம்சம் வலுவா இருந்தாக் கூட, சில நல்ல படங்களை ஓடிடியில் வாங்கறதில்ல. அதுக்கு உதாரணம், மலையாளத்தில் செம பெயர் வாங்கின 'த கிரேட் இண்டியன் கிச்சன்'.

அவங்க போகாத ஓடிடி ப்ளாட்ஃபார்ம்கள் கிடையாது. எங்கேயும் படத்தை வாங்கிக்கல. வேற வழியில்லாம ஒரு சாதாரண ஓடிடியில்தான் ரிலீஸ் பண்ணினாங்க. அது பெரிய வைரல் ஆன பிறகுதான் பிரைம்ல வாங்கி ரிலீஸ் பண்ணினாய்ங்க.

சினிமாவில் ஒரு படத்தை விற்கவோ, இல்ல ரிலீஸ் பண்ணவோ மீடியட்டர்கள்தான் இப்ப வலுவான காரணியா இருக்காங்க. அந்த மாதிரி பெரிய கம்பெனிகளுக்கு சரியான மீடியேட்டர்கள் இல்லைன்னுதான் சொல்லோணுங்க.. அவங்க சரியா வழிநடத்தறதில்லை.. டாப் ஆர்டிஸ்ட் படங்கள் & ஹிட் டைரக்டர் சினிமாக்களை மட்டும் அப்ரோச் பண்ற மகான்களா இருக்காய்ங்க

ஆனா, சின்ன பட்ஜெட் படங்களுக்கு அப்படியில்ல. வெறுமனே கமிஷனுக்காக மட்டும் ஒர்க் பண்ற மீடியேட்டர் ஒர்க் பண்ற இயக்குநர், புரொடியூசர்ஸ், ஜர்னலிஸ்ட் போர்வை போத்தியவங்க.. அப்படி., இப்படி-ன்னு இங்கே ஏராளமானோர் ஒருபக்கம் ஏதேதோ சொல்லி ஏமாத்தி பிழைப்பது அதிகரிச்சிருக்குது.

அதே சமயம் சரியான ஆட்களை பிடிச்சு அவங்க வழியா புராடக்ட்டை எடுத்துட்டுப் போய் புஷ் பண்ணினா ஓடிடியிலோ, தியேட்டர்களிலோ வெளியாகுது. கன்டன்ட் மட்டுமில்ல... கரெக்டான லிங்க்கும் இருந்தா மட்டுமே

ஓ அப்படியா .... ஆமாண்ணே அது சரி

சரியான ஆட்கள் என்பதை எங்கனம் அறிவது ? என்று கேட்டால் பதில் நஹி..


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!