ஏழாண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசின் திரைப்பட விருதுகள் விழா..!
பைல் படம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை அரசியலும் சினிமாவும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்றால் மிகையில்லை. ஆம். பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி, எம்ஜிஆர், வி.என்.ஜானகி, ஜெயலலிதாவைத் தொடர்ந்து தற்போது மு.க.ஸ்டாலின் என தமிழக முதலமைச்சர் நாற்காலியை அலங்கரித்தவர்களுக்கும் சினிமாவுக்கும் உள்ள தொடர்பை அறியாதவர் எவரும் இல்லை.
எனவேதான், இவர்கள் எப்போதுமே தமிழ்த் திரையுலகையும் தங்கள் அரசியலோடு பிணைத்துக்கொண்டே இருப்பார்கள். அதனடிப்படையில், தமிழ்த் திரைப்படங்களுக்கும் அதனை அடுத்து வந்த சின்னைத்திரைக்கும் அவற்றில் சம்பந்தப்பட்ட நடிகர், நடிகை, தொழில் நுட்பக் கலைஞர்கள் என சிறந்தவர்களைத் தேர்ந்தெடுத்து அக்கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் விழா நடத்தி விருதுகள் வழங்கி கௌரவித்து வந்தனர்.
ஏதோ சில காரணங்களால் ஏழாண்டுகளுக்கும் மேலாக விருதுகள் வழங்கும் விழா நடைபெறாமல் இருந்தநிலையில், தற்போது செப்டம்பர் நான்காம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவை நடத்த திட்டமிட்டிருக்கிறது. விழாவில் 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கும் சின்னத் திரைக் கலைஞர்களுக்கும் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவப்படுத்தவிருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu