/* */

டைமிங்குல-ரைமிங்கா காமெடி பண்ணும் கவுண்டபெல் 82வது பெர்த் டே இன்னிக்கு

‘இதெப்படி இருக்கு’ என்று ரஜினி கேட்க, ‘நல்லா இல்ல’ அந்த டைமிங் ரைமிங் வசனம்தான்,அவரின் முதல் பஞ்ச்’சாக இருக்கவேண்டும்.

HIGHLIGHTS

டைமிங்குல-ரைமிங்கா காமெடி பண்ணும் கவுண்டபெல் 82வது பெர்த் டே இன்னிக்கு
X

கவுண்டமணி 82வது பிறந்தநாள்.

கவுண்டமணி தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர். பெரும்பாலான திரைப்படங்களில் இவர் நடிகர் செந்திலுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த இணை, ஹாலிவுட் நகைச்சுவை இணையான லாரல் மற்றும் ஹார்டியுடன் ஒப்பிட்டு பாராட்டப்படுவதுண்டு.

கவுண்டமணி கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சியிலிருந்து திருமூர்த்தி மலைக்குச் செல்லும் வழியில் இருக்கும் வல்லகுண்டாபுரம் கிராமத்தில் 1939 ம் ஆண்டு மே மாதம் 25 ம் தேதி கருப்பையா-அன்னம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவரது ஆரம்பகாலத்தில் மேடை நாடகங்களில் சாதாரணமான பாமர தமிழ் பேசி நடித்ததால். திரையுலகில் கால் பதிக்க வழி செய்தது. அவர் நடித்த நாடகமொன்றில் ஊர் கவுண்டர் என்ற கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்ததையொட்டி அவர் கவுண்டமணி என்று அழைக்கப்படலானார். 26 வது வயது முதலே திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இரண்டு தலைமுறை இரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். அவரது பேச்சும், உரையாடல்களும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றன.

இந்த இணையின் மிகப் புகழ்பெற்ற நகைச்சுவை கரகாட்டக்காரனில் வந்த வாழைப்பழம் வாங்குதல் குறித்ததாகும். சூரியன் திரைப்படத்தில் அவர் கூறிய அரசியலில்லே இதெல்லாம் சகஜமப்பா என்ற சொல்லாடலும் மிகவும் பரவலாக அறியப்பட்டது. இவர் நடித்திருக்கும் சில திரைப்படங்கள்இவர் சுமார் 450 திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் சுமார் 10 திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வில்லன், குணசித்திர நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார்.

ரசிகர்களை மிகச்சுலபமாக அழவைத்துவிடமுடியும். ஆனால், சிரிக்கவைப்பது சாதரணமில்லை. சிரிக்க வைப்பது, வயிறு வலிக்க சிரிக்க வைப்பது, விழுந்து விழுந்து சிரிக்கவைப்பது, மனம் விட்டு சிரிக்கவைப்பது, வாய்விட்டுச் சிரிக்கவைப்பது என்பதெல்லாம் சாதாரண விஷயமில்லை.காமெடியில் எவரின் சாயலுமில்லாமல், சாதனைப் படைத்தவர்தான் கவுண்டமணி.

நடிக்கவேண்டும் என்கிற ஆசையில், கொங்கு தேசத்தில் இருந்து சென்னைக்கு வந்து சின்னச்சின்ன வேடங்களில் நாடகங்களிலும் பின்னர் சினிமாவிலும் நடித்தார் சுப்ரமணி. சிவாஜியின் 'ராமன் எத்தனை ராமனடி' உள்ளிட்ட படங்களில், ரசிகர்கள் கவனத்தில் கொள்ளாத வேடங்களில், தலைகாட்டிச் செல்லும் பாத்திரங்கள்தான் கிடைத்தன. ஆனாலும் சோர்ந்துபோகாமல், தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருந்தாராம்.

'16 வயதினிலே' ஏகப்பட்ட பேரை அடையாளம் காட்டியது. முகவரி கொடுத்தது. பாரதிராஜா, பாக்யராஜ், பி.வி.பாலகுரு, நிவாஸ் முதலான கலைஞர்கள் நமக்குக் கிடைத்தார்கள். இளையராஜாவின் பாய்ச்சலும் கமலின் உன்னதமான நடிப்பும் ரஜினியின் அசுரத்தனமான வில்லத்தனமும் ஸ்ரீதேவியின் முதிர்ந்த நடிப்பும், காந்திமதியின் யதார்த்தமான நடிப்பும் என பலர் நமக்கு தெரிந்தார்கள்.

'பரட்டை' ரஜினிக்கு பக்கத்தில், மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு, 'பத்தவச்சிட்டியே பரட்டை' என்று சொன்னதும் அப்படியொரு கைதட்டல் கிடைத்தது. 'இதெப்படி இருக்கு' என்று ரஜினி கேட்க, 'நல்லா இல்ல' என்று சொன்ன டைமிங்கை ரசித்துச் சிரித்தது. அந்த டைமிங் ரைமிங் வசனம்தான், அநேகமாக அவரின் முதல் 'பஞ்ச்'சாக இருக்கவேண்டும்.

நாடகத்தில் அவரின் டயலாக் டெலிவரிக்கு, ஏகப்பட்ட பாராட்டுகள். அதனால் மணியை, 'கவுண்ட்டர்' மணி என்று அழைத்தார்கள். 'ஓ... இவர் பெயர் கவுண்டமணி போல' என்று நினைத்த பாக்யராஜ், அப்போது '16 வயதினிலே' படத்தில் உதவி இயக்குநர். டைட்டிலில் பெயர் போடுவதற்குப் பட்டியல் தயாரிக்கும் போது, கவுண்டமணி என்று எழுதிக் கொடுத்தார். அப்படித்தான் டைட்டிலில் வந்தது. பத்தோடு பதினொன்றாக கவுண்டமணி என்று அப்போது வந்த பெயர், அடுத்தடுத்த படங்களில் வரும்போதே, மிகப்பெரிய கரவொலி கிடைத்ததுதான் கவுண்டமணியின் ஆரம்பகால வெற்றி. வெற்றிக்கான ஆரம்பம்.

'கிழக்கே போகும் ரயில்' படத்துல நடிச்ச அந்தக் கேரக்டர், கவுண்டமணியை எங்கேயோ கொண்டுபோச்சு'' என்று தெரிவித்தார். 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் 'கிளிகிளிகிளிகிளி... அங்கே ஒரு கிளி இங்கே ஒரு கிளி. அங்கே இருக்கறது பச்சைக்கிளி. இங்கே இருக்கறது பாஞ்சாலிக்கிளி', 'புதியவார்ப்புகள்' படத்தின் 'உள்ளதைச் சொல்றேங்க', 'சுவரில்லாத சித்திரங்கள்' படத்தின் 'சரோசா... குப்பை கொட்றியா கொட்டு கொட்டு' என்பதெல்லாம் கவுண்டமணியின் காமெடிப் பேட்டைக்கு 'டேக் ஆஃப்' கொடுத்தன.

'பயணங்கள் முடிவதில்லை'படத்தில் 'இந்த சென்னை மாநகரத்திலே', 'நான் பாடும் பாடல்' படத்தில் 'கிடா வெட்டுவீங்களா?', 'உதயகீதம்' திருடன், 'இதயக்கோயில்' பாடகர், 'வைதேகி காத்திருந்தாள்' சைக்கிள் கடைக்காரர், 'கன்னிராசி'யின் பிரபுவின் அக்காள் கணவர், 'சின்னதம்பி'யில் குஷ்பு வீட்டு வேலையாள், 'சிங்காரவேல'னில் கமலின் நண்பர்களில் ஒருவர், 'மன்னனி'ல் ரஜினியுடன் தொழிற்சாலை ஊழியர், 'சூரியனி'ல் அரசியல்வாதி, 'ஜென்டில்மேனி'ல் அர்ஜுனுடன் சேர்ந்து கொள்ளையடிப்பவர், 'இந்தியனி'ல் ஆர்டிஓ ஆபீஸ் புரோக்கர், பார்த்திபனுடன் 'டாட்டா பிர்லா', கார்த்திக்குடன் 'உள்ளத்தை அள்ளித்தா',

'உனக்காக எல்லாம் உனக்காக', 'மேட்டுக்குடி', சத்யராஜுடன் கணக்கிலடங்கா படங்கள், இந்தப் பக்கம் விஜயகாந்த், அந்தப் பக்கம் பிரபு, நடுவே ஜெயராமுடன் கூட்டணி, திடீரென்று அஜித்துடன், அப்புறம் விஜய்யுடன்... ஆனால், எப்போதும் செந்திலுடன் என்று மிகப்பெரிய ரவுண்டு, நம்மை ரவுண்டுகட்டி சிரிக்க வைப்பதில் வில்லாதிவில்லன் கவுண்டமணி. 'நடிகன்', 'ஜெய்ஹிந்த்', 'சின்னதம்பி','மன்னன்' கவுண்டமணியின் காமெடிக்காகவே இன்னும் ஐம்பதுநாள் சேர்த்து ஓடிய கதைகளெல்லாம் உண்டு.

கங்கை அமரனின் 'கரகாட்டக்காரன்' படத்தையும் கவுண்டமணியையும் சொப்பனசுந்தரியையும் முக்கியமாக, வாழைப்பழத்தையும் மறக்கவே மாட்டார்கள். 'சூரியன்' படத்தின் அரசியல்வாதி கேரக்டரில் அசத்திவிடுவார். 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணப்பா' என்பதும் 'ஏய் இங்கே பூசு... அங்கே பூசு, பேக்ல பூசு' என்பதும் 'நான் ரொம்ப பிஸி' என்பதும் இன்றைய டிரெண்டிங் உலகில் ஃப்ரஷ்ஷாகவே டிரெண்டடித்துக்கொண்டிருக்கின்றன.#கவுண்டமணி பிறந்த நாள் #Goundamani Birthday

கவுண்டமணி அண்ணனை செய்தி குழுமம் சார்பாக மனதார வாழ்த்துகிறோம்..

Updated On: 25 May 2021 2:50 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  2. லைஃப்ஸ்டைல்
    கஸ்தூரி மஞ்சளின் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    கொடூர வலி தரும் சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
  4. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  5. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  6. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  7. குமாரபாளையம்
    நகராட்சி பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஆய்வு..!
  8. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  9. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  10. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...