தடம் மாறியதால் 'தடம்' பதிக்க தவறிய தமிழ் நடிகை மாதுரி

Madhuri Tamil Actress
X
Madhuri Tamil Actress - தமிழ் திரையுலகில் 1980களில் கோலோச்சிய Tamil Actress Mathuri, தடம் மாறிச் சென்றதால் திரையுலகில் முத்திரை பதிக்கத் தவறினார்.

Madhuri Tamil Actress - கடந்த 1980களில் பல்வேறு மலையாளப் படங்களில் நடித்து, பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். அதுவும், பலரும் தயங்கிய போது 'ஏ' சான்றிதழ் பெற்ற படங்களிலும் துணிச்சலுடன் நடித்தவர் #நடிகை மாதுரி #Tamil Actress Mathuri. இவர், மலையாளத்தில் கமலுடன் நடித்த பிரபல நடிகை லலிதாஸ்ரீயின் சகோதரி ஆவார்.

மலையாளப் படங்களில் நடித்தவருக்கு, 1985ல் தமிழ்ப்பட வாய்ப்பு, கதவை தட்டியது. அலை ஓசை படத்தில் நடித்த மாதுரிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. விஜயகாந்துடன் மாதுரி நடித்த 'அன்னை என் தெய்வம்' மாதுரிக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

இதன் பலனாக, அப்போது தமிழில் முன்னணியில் இருந்த கார்த்திக், பிரபு, ராமராஜன், அர்ஜுன் போன்றவர்களுடன் நடிகை மாதுரி நடித்தார். எனினும், தமிழில் நடித்துக் கொண்டிருந்தாலும், 'அர்த்த ராத்திரி'போன்ற மலையாள 'ஏ' சான்றிதழ் படங்களிலும் நடித்து வந்தார் #Tamil Actress மாதுரி.

சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தில் மாதுரி Tamil Actress Mathuri

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'மனிதன்' படத்தில், அவருக்கு தங்கையாக மாதுரி நடித்து பலரின் பாராட்டை பெற்றார். 1980களின் பிற்பகுதியில் ஏராளமான வாய்ப்புகள் கைவசம் இருந்தன; ஆனால், 1990களின் ஆரம்பத்தில், வாய்ப்புகள் குறையத் தொடங்கின.

அதன் பிறகு, 1995-க்கு பின்னர், நடிகை மாதுரி திரைவானில் இருந்து மறைந்தே போனார். அதே நேரம், 2002-ஆம் ஆண்டில், நடிகை மாதுரி குறித்த செய்திகள், மீண்டும் அவரை ரசிகர்களுக்கு நினைவுபடுத்தின. ஆனால், அவை கசப்பானவை. ஏனென்றால், பெண்களை வைத்து விபச்சாரம் செய்ததாக மாதுரி கைது செய்யப்பட்டார். பின்னர், வழக்கு - விசாரணை என்று நடையாய் நடந்தார்.

குணச்சித்திர நடிகையாக மலையாளம், தமிழ்ப் பட உலகில் கோலோச்சிய நடிகை மாதுரி, விபச்சார வழக்கால் இருந்த அடிச்சுவடு தெரியாமல் காணாமல் போனார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story