/* */

மும்பையில் வீடு வாங்கியுள்ள தமிழ் நடிகர்கள்!

தமிழ் நடிகர்கள் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்ததோடு நிற்காமல் மும்பையில் வீடு ஒன்றை வாங்கி அங்கேயே தங்கி பட வேலைகளைப் பார்க்கின்றனர். இதில் சூர்யா தற்போதைய டாக் என்றாலும் இவருடன் சேர்த்து 5 நடிகர்கள் மும்பையில் வீடு வைத்திருக்கிறார்கள்.

HIGHLIGHTS

மும்பையில் வீடு வாங்கியுள்ள தமிழ் நடிகர்கள்!
X

தமிழ் சினிமாவை மற்ற திரையுலகங்களும் மற்ற மொழி ரசிகர்களும் எப்படி கொண்டாடுகிறார்களோ அதேபோலத்தான் நடிகர்களையும் அவர்கள் விரும்புகிறார்கள். இதனால் தமிழ் நடிகர்களும் மற்ற மொழிகளில் நடிக்கிறார்கள். திரைப்படம், இணைய தொடர் என இவர்கள் பல மொழிகளிலும் கலக்குவதற்கு அங்கு அவர்களுக்கான வரவேற்பே காரணம். மாதவன் முதல் தனுஷ் வரை பாலிவுட்டைக் கலக்கி வந்திருக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் கமல்ஹாசன் அளவுக்கு இந்திய சினிமாவின் அத்தனை மொழிகளிலும் நடித்த ஒரு நடிகரைக் காண முடியாது. இப்போதும் கூட அவரது படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, வங்க மொழி பேசும் மக்களுக்கு சென்றடைகிறது.

தமிழ் நடிகர்கள் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்ததோடு நிற்காமல் மும்பையில் வீடு ஒன்றை வாங்கி அங்கேயே தங்கி பட வேலைகளைப் பார்க்கின்றனர். இதில் சூர்யா தற்போதைய டாக் என்றாலும் இவருடன் சேர்த்து 5 நடிகர்கள் மும்பையில் வீடு வைத்திருக்கிறார்கள்.

காஜல் அகர்வால்


காஜல் அகர்வால் வட இந்தியர்தான் என்றாலும் தமிழில் நிறைய படங்களில் நடித்து தமிழராகவே வலம் வருகிறார். தமிழ் மக்களின் உள்ளத்தில் இடம்பிடித்த காஜல் அகர்வால் கடந்த 2020ம் ஆண்டு கௌதம் கிச்லு என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. 2021ம் ஆண்டு மும்பையில் ஒரு சொகுசு பங்களாவில் ஃபிளாட் ஒன்றை வாங்கியிருக்கிறார் காஜல். அந்த வீட்டில் தனது கணவர், குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். தென்னிந்திய படங்களில் நடிக்க வேண்டிய நேரங்களில் சென்னை, ஹைதராபாத்துக்கு பயணம் மேற்கொள்கிறார். மற்ற நேரங்களில் குடும்பத்துடன் கழிக்கிறார்.

தமிழ், தெலுங்கில் படு பிஸியாக இருந்த காஜல் அகர்வால் தற்போது கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

தமன்னா


தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழும் தமன்னா தற்போது ஹிந்தி பக்கம் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் பட வாய்ப்புகள் குறைந்திருந்தாலும் ஹிந்தி பக்கமும் கவனம் செலுத்தியபடி இருக்கிறார் தமன்னா. மும்பையில ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கியிருக்கும் தமன்னா தற்போது அங்குதான் வசிக்கிறார்.

பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வரவேண்டும் எனும் எண்ணத்தில் அங்கேயே தங்கிக் கொள்வதாகவும் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு வரும்போது மட்டும் இங்கே வருவதாகவும் கூறப்படுகிறது. கதை கேட்கவேண்டிய அவசியம் ஏற்பட்டால் கூட இயக்குநர்களை மும்பைக்கு வரவழைக்கிறார் தமன்னா.

சூர்யா


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, தன் மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் மும்பைக்கே குடிபெயர்ந்துவிட்டார். மும்பையில் 70 கோடி ரூபாய் செலவில் வாங்கிய சொகுசுக் குடியிருப்பில் வசித்து வருகிறார். ஜோதிகாவும் தற்போது ஹிந்தி படங்களைத் தயாரிக்கவும், ஹிந்தி வெப்சீரிஸில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார் என்பதால் சில வருடங்களுக்கு அங்கேயே தங்கியிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

மாதவன்


தொடர்ந்து தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வரும் மாதவன் மும்பையில் ஒரு பெரிய வசதியான வீட்டை வாங்கியிருக்கிறார். மும்பைக்கும் சென்னைக்கும் அடிக்கடி பயணிக்கும் ஒரு நபராக இவர் இருக்கிறார். இவரது குடும்பம் சென்னையில் இருந்தாலும் பெரும்பாலும் இவர் தனது மனைவியுடன் மும்பையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு காரணம் பட வாய்ப்புகளை சரியான நேரத்தில் பெறுவதற்காகத்தான் என்கிறார்கள்.

தனுஷ்


மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டை அடுத்து தனுஷ் மும்பையில் வாங்கிய வீட்டிலும், ஐஸ்வர்யா சென்னையிலும் இருக்கிறார்கள் என சில மாதங்களுக்கு முன்னர் செய்தி வெளியாகியிருந்தது. அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் தனுஷ் மும்பைக்கு அடிக்கடி சென்று வருகிறார் என்பது உண்மை. எப்போதெல்லாம் மும்பைக்கு செல்கிறாரோ அப்போதெல்லாம் அவரது ஃபிளாட்டிலேயேதான் தங்குவாராம். பட நிறுவனங்கள், இயக்குநர்கள் அணுகினாலும் அவர்களை அவரது சொந்த வீட்டில்தான் சந்திக்கிறார் என்கிறார்கள். பாலிவுட் நடிகர்கள், நடிகைகளுடனும் நல்ல உறவில் இருக்கும் தனுஷ் அவ்வப்போது மும்பை பறந்த இரண்டு வருடங்களுக்கு ஒரு ஹிந்தி படத்திலாவது நடிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறாராம்.

Updated On: 27 March 2023 4:41 AM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  பாஜக வெற்றி பெற்றால் கர்தவ்யா பாதையில் ஜூன் 9 பதவியேற்பு விழா
 2. திருவண்ணாமலை
  சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய ஆர் ஐ கைது
 3. திருவண்ணாமலை
  இலங்கை தமிழ் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிக்காட்டுதல் பயிற்சி
 4. தொழில்நுட்பம்
  கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை 'ருத்ரம்-II: இந்தியா வெற்றிகரமாக சோதித்த...
 5. ஆன்மீகம்
  Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
 6. ஈரோடு
  பெருந்துறை அருகே பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவர்...
 7. நாமக்கல்
  நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர் சரிவில் இருந்து மீண்டது
 8. ஈரோடு
  ஈரோட்டில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! போக்சோவில் கைதான ஆட்டோ
 9. ஈரோடு
  ரூ.35 ஆயிரம் லஞ்சம்: சத்தியமங்கலம் நகர சார்பமைப்பு ஆய்வாளர் உள்பட...
 10. தமிழ்நாடு
  தென்னகத்தை ஆளப்போகும் ராமேஸ்வரம் கஃபே..