சிம்பு எங்கேயோ இருக்காரு... கடைசி இடத்துலதான் சூப்பர் ஸ்டாரே!

சிம்பு எங்கேயோ இருக்காரு... கடைசி இடத்துலதான் சூப்பர் ஸ்டாரே!
X
டாப் 10 அதிக இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களைக் கொண்ட தமிழ் நடிகர்கள் பட்டியலை இங்கு காண்போம்.

நடிகர் விஜய் இதுவரை டிவிட்டர் கணக்கில் மட்டுமே இருந்து வந்த நிலையில், இப்போது இன்ஸ்டாகிராமிலும் கணக்கு துவங்கியிருக்கிறார். இதுதான் தற்போதைய ஹாட் டாபிக்காக இருக்கிறது. யார் யார் எப்போது இன்ஸ்டா கணக்கு ஆரம்பித்தார்கள். யாருக்கு எத்தனை ஃபாலோவர்கள் என ரசிகர்கள் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் நடிகர்களில் டாப் 10 ஃபாலோவர்களைக் கொண்ட நடிகர்கள் யார் யார் என்பதை இந்த பதிவில் காண்போம்.



சிம்பு | actor simbu instagram id

11.8 மில்லியன் பேர் சிம்புவை பின்தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். டாப் 10 நடிகர்கள் பட்டியலில் இவர்தான் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். இவர் சமீபத்தில் மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். இவர் அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.


விஜய் சேதுபதி | actor vijay sethupathi instagram

6.7 மில்லியன் பேர் விஜய் சேதுபதியை பின்தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். டாப் 10 நடிகர்கள் பட்டியலில் இவர்தான் இரண்டாமிடத்தைப் பிடித்திருக்கிறார். இவர் சமீபத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல், விக்ரம் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். பல படங்களில் நடித்து வந்தாலும் இப்போது வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த வெப்சீரிஸை காக்கா முட்டை, கடைசி விவசாயி மணிகண்டன் இயக்குகிறார்.



சூர்யா | actor suriya instagram

6.4 மில்லியன் பேர் சூர்யாவை பின்தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். டாப் 10 நடிகர்கள் பட்டியலில் இவர்தான் மூன்றாமிடத்தைப் பிடித்திருக்கிறார். இவர் சமீபத்தில் சூரரைப் போற்று, ஜெய்பீம், விக்ரம் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். சூர்யா 42 படத்தின் பிரம்மாண்டமான ஷூட்டிங்கில் இருக்கிறார். மும்பையில் சொந்த வீடு வாங்கி குடும்பத்துடன் அங்கு குடிபெயர்ந்துவிட்டார்.



சிவகார்த்திகேயன் | actor sivakarthikeyan instagram

5.7 மில்லியன் பேர் சிவகார்த்திகேயனை பின்தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். டாப் 10 நடிகர்கள் பட்டியலில் இவர்தான் நான்காமிடத்தைப் பிடித்திருக்கிறார். இவர் சமீபத்தில் பிரின்ஸ், மாவீரன் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். அயலான், கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார்.



தனுஷ் | actor dhanush instagram id

5.6 மில்லியன் பேர் தனுஷை பின்தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். டாப் 10 நடிகர்கள் பட்டியலில் இவர்தான் ஐந்தாமிடத்தைப் பிடித்திருக்கிறார். இவர் சமீபத்தில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். அடுத்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தனது சொந்த இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.



விஜய் | actor vijay instagram id

4.7 மில்லியன் பேர் விஜய்யை பின்தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். டாப் 10 நடிகர்கள் பட்டியலில் இவர்தான் ஆறாமிடத்தைப் பிடித்திருக்கிறார். இவர் சமீபத்தில் வாரிசு, லியோ

ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். லியோ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பைத் தொடர்ந்து சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிக்காக காத்திருக்கிறார். ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் இந்த ஷூட்டிங் துவங்கும் என்று கூறப்படுகிறது.


கார்த்தி | actor karthi instagram id

3 மில்லியன் பேர் கார்த்தியை பின்தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். டாப் 10 நடிகர்கள் பட்டியலில் இவர்தான் ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். இவர் சமீபத்தில் விருமன், சர்தார்

ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். பொன்னியின் செல்வன் பாகம் 2 இந்த மாதம் வெளியாக இருக்கிறது. அதற்கான புரமோசன் பணிகளில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. இவர் நடித்து வரும் ஜப்பான் திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.



கமல்ஹாசன் | actor kamal haasan instagram

2.7 மில்லியன் பேர் கமலை பின்தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். டாப் 10 நடிகர்கள் பட்டியலில் இவர்தான் 8வது இடத்தைப் பிடித்திருக்கிறார். இவர் சமீபத்தில் விக்ரம், இந்தியன் 2

ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், அடுத்து ஹெச் வினோத், மணிரத்னம் ஆகியோர் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.


விக்ரம் | actor vikram instagram

1.7 மில்லியன் பேர் விக்ரமை பின்தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். டாப் 10 நடிகர்கள் பட்டியலில் இவர்தான் 9வது இடத்தைப் பிடித்திருக்கிறார். இவர் சமீபத்தில் பொன்னியின் செல்வன், கோப்ரா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். விக்ரம் இப்போது தங்கலான் படத்தில் இருக்கிறார். இதை முடித்துக் கொண்டு விரைவில் பட வெளியீட்டு வேலைகளை தொடர்வார்கள் என்று தெரிகிறது.



ரஜினிகாந்த் | actor rajinikanth instagram

951 ஆயிரம் பேர் ரஜினியை பின்தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். டாப் 10 நடிகர்கள் பட்டியலில் இவர்தான் கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறார். இவர் சமீபத்தில் தர்பார், அண்ணாத்த

ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!