Taapsee Pannu In US-அமெரிக்க வீதிகளில் சுற்றி திரியும் டாப்ஸி

Taapsee Pannu In US-அமெரிக்க வீதிகளில் சுற்றி திரியும் டாப்ஸி

நடிகை டாப்ஸி.

Taapsee Pannu In US-நடிகை டாப்ஸி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஜாலியாக சுற்றித்திரியும் போட்டோக்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டாப்சி பன்னு இந்தியத் திரைப்பட நடிகை. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் இந்தித் திரைத்துறையில் தற்போது பணியாற்றி வருகிறார். 2010 இல் சும்மாண்டி நாதம் என்னும் தெலுங்குத் திரைப்படம் மூலம் திரைத்துறையில் நுழைந்தார். பின்னர் 2011 ஆம் ஆண்டு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படம் மூலம் தமிழில் இவர் அறிமுகமானார். இந்தப் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார் டாப்ஸி. இதனை தொடர்ந்து இவர் வந்தான் வென்றான், காஞ்சனா 2 கேம் ஓவர் என போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.


இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது இவர் பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் நடித்த, ’பிங்க்’, ’நாம் ஷபானா’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் பல இந்தி படங்களில் நடித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து சமீப காலமாகவே நடிகை டாப்ஸி நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.


இந்நிலையில் சமீபகாலமாக 6 பேக் வைக்க எடுத்துக் கொண்ட உடற்பயிற்சி போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்தார். இதனையடுத்து இந்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. தற்போது நடிகை டாப்ஸி தனது சொந்த வேலை காரணமாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஜாலியாக சுற்றித்திரியும் போட்டோக்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோக்களும் அவரது ரசிகர்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

Tags

Next Story