ஒருவேளை 'அஞ்சான் 2' வந்துருமோ? – தீயாய் பரவும் தகவலால் பரபரக்கும் கோலிவுட்!

ஒருவேளை அஞ்சான் 2 வந்துருமோ? – தீயாய் பரவும் தகவலால் பரபரக்கும் கோலிவுட்!
X

Surya may again unites with director லிங்குசாமி - மீண்டும் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் சூர்யா?

Surya may again unites with director Lingusamy - ஆனந்தம் என்ற குடும்பப் படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகம் ஆன லிங்குசாமி, பின் விஷால், ராஜ்கிரண் நடிப்பில் 'சண்டக்கோழி' படத்தின் மூலம் கமர்ஷியல் இயக்குனராக வெற்றி பெற்றார்.

Surya may again unites with director Lingusamy - இயக்குனர் லிங்குசாமி இயக்கத்திலான அடுத்த படத்தில், நடிகர் சூர்யா மீண்டும் இணைய உள்ளதாக கோலிவுட்டில் பரவிய தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனந்தம் என்ற குடும்பப் படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகம் ஆன லிங்குசாமி, பின் விஷால், ராஜ்கிரண் நடிப்பில் 'சண்டக்கோழி' படத்தின் மூலம் கமர்ஷியல் இயக்குனராக வெற்றி பெற்றார்.

பின் 2015ஆம் ஆண்டில் ஆக்ஷன் இயக்குனராக வேண்டி அதற்கான திரைக்கதையை உருவாக்கி, நடிகர் சூர்யா நடிப்பில் 'அஞ்சான்' படத்தை இயக்கினார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை என்பதற்கு மிக முக்கிய காரணம், இயக்குனர் லிங்குசாமியின் வாயில் இருந்து உதிர்த்த வார்த்தைகளே ஆகும்.

Surya may again unites with director Lingusamy - இந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே, தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இதில் இறக்கி இருப்பதாக இயக்குனர் லிங்குசாமி தெரிவித்து இருந்தார். இந்த வார்த்தைகள், அஞ்சான் படத்தின் மீதான எதிர்பார்ப்பை, ரசிகர்களிடையே பெருமளவு அதிகரித்து இருந்தன.

ஆனால், அந்த எதிர்பார்ப்பை அஞ்சான் படம், நிறைவேற்ற தவறிவிட்டது என்பதே மறுக்க முடியாத உண்மை.

அஞ்சான் படம் படுதோல்வி அடைந்ததன் காரணமாக, திரைத்துறையை விட்டு சிறிதுகாலம் லிங்குசாமி ஒதுங்கி இருந்தார். சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, தற்போது டோலிவுட் நடிகர் ராம் பொதினேனி, கிர்த்தி ஷெட்டி நடிப்பில், 'தி வாரியர்' படத்தை இயக்கி உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படம் வெளியாகி உள்ளது.

Surya may again unites with director Lingusamy - இந்த படமும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாததால், ரசிகர்கள் எதிர்மறை விமர்சனங்களையே, இந்த படத்திற்கு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்திலான அடுத்த படத்தில், நடிகர் சூர்யா, நடிக்க உள்ளதாக கோலிவுட்டில் ஒரு தகவல் தீயாக பரவியது.

சூர்யா, தற்போது இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் 'வணங்கான்' படத்தில் நடித்து வருகிறார். மீண்டும் அவர் லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டு உள்ள நிலையில், நடிகர் சூர்யாவின் தரப்பு, ஊடகங்களில், இயக்குனர் லிங்குசாமி தொடர்பான செய்தியில் உண்மையில்லை என்று ஒவ்வொரு ஊடகமாக சென்று சொல்லி வருகின்றனர்.

ஒருவேள வந்துருமோ!

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!