Virkam Vs Suriya அப்படி என்ன சண்டை இவங்களுக்குள்ள?

Virkam Vs Suriya அப்படி என்ன சண்டை இவங்களுக்குள்ள?
X
நடிகர்கள் விக்ரம், சூர்யா இருவருக்குமிடையில் பனிப்போர் நடந்து வருவதால் இருவரும் ஒருவரையொருவர் சந்திப்பதில்லை, வாழ்த்துவதில்லை

நடிகர்கள் விக்ரம், சூர்யா இருவருக்குமிடையில் பனிப்போர் நடந்து வருவதால் இருவரும் ஒருவரையொருவர் சந்திப்பதில்லை, வாழ்த்துவதில்லை என்று கூறப்படுவதுண்டு. இருவரும் ஒவ்வொருவரது படங்கள் பற்றி பேசுவதும் இல்லை என கடந்த சில வருடங்களாகவே சமூக வலைத்தளங்களில் பேச்சு உண்டு. இருவருக்கும் அப்படி என்ன பிரச்னை? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.

சீயான் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

விக்ரம் நாயகனாக நடிக்கும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். படத்துக்கு நல்ல பாடல்களையும் கொடுத்து பின்னணி இசை அமைத்திருக்கிறார் ஜி வி பிரகாஷ்குமார். பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படத்தில் வில்லனாக ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்ட்டகிரோன் நடித்திருக்கிறார்.

இவர்களின் கூட்டணியில் மிகப் பெரிய பட்ஜெட்டில் இந்த திரைப்படம் நாளை சுதந்திர தினத்தில் வெளியாக இருக்கிறது. ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த படத்துக்கு இப்போதே பாசிடிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கிவிட்டன. படத்தை பார்த்தவர்களிடமிருந்து நல்ல ரிப்போர்ட் கிடைத்து வருகிறது. இந்த படத்தின் திரையரங்கு உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆகியுள்ளது.

அஜித், விஜய், சூர்யா அளவுக்கு விக்ரமுக்கு ரசிகர்கள் இல்லை என விக்ரமிடம் மேடையிலேயே ஒருவர் கேள்வி எழுப்ப, கொஞ்சம் அதிர்ந்துதான் போனார் விக்ரம். ஆனால் சுதாரித்துக்கொண்டு அவரின் மனம் புண்படாதபடியும் சாதாரணமாக பேசி அனுப்பிவிட்டார். ஆனால் சூர்யாவுக்கு ரசிகர்கள் அதிகம் என்று சொன்னது விக்ரமை பாதித்திருக்கும் என்றே பலரும் கருதுகின்றனர்.

இதனிடையே, ரசிகர்களே எதிர்பாராத விதமாக சூர்யா தனது டிவிட்டர் கணக்கிலிருந்து தங்கலான் படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என அவர் டிவீட்டில் வாழ்த்தியுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்து விக்ரமும் பதிலளித்துள்ளார். ஆனால் இவை மிகவும் ஃபார்மலாக இருப்பது ரசிகர்களின் கண்களை உறுத்துகிறது. ஏனென்றால் வழக்கமாக ஒருவரை வாழ்த்துவதென்றால் நண்பர் என்றோ மரியாதை நிமித்தமாக ஏதாவது ஒன்றை சொல்லியோ, அவர்களது திறமையை பற்றி பேசியோ பதிவிடுவதுதான் இயல்பு. ஆனால் சூர்யாவும் சரி, விக்ரமும் சரி மேம்போக்காக ஜஸ்ட் லைக் டேட் எனும் வகையில் பதிலளித்துள்ளார்.

நாளை தங்கலான் திரைப்படம் வெளியாகும் நிலையில், சூர்யா வாழ்த்து தெரிவித்திருப்பது ஒரு பக்கம் சிறப்பானதாக பார்க்கப்பட்டாலும் அவர்களுக்கு இடையில் முன்பு போல பேச்சுவார்த்தை இல்லை என்பது மட்டும் தெரியவருகிறது.

என்னதான் பிரச்னை?

பாலாதான் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னைக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. விக்ரமை விட அதிகமான வெளிச்சம் பிதாமகன் படத்தில் சூர்யாவுக்கு கிடைத்திருக்கும் இதனால் விக்ரம் கொஞ்சம் வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பாலாதான் காரணம் என்கிறார்கள்.

அதன்பிறகு விக்ரமுக்கு தேசிய விருது கிடைத்தது. இதனால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் இடையில் விரிசல் உண்டானதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் அதன்பிறகு அவ்வப்போது பல முறை இருவரும் சந்தித்துக் கொள்வது வழக்கமாக இருந்தது. ஆனால் இருவருக்கும் இடையில் யாரோ சிலர் கொளுத்திப் போட்டு பிரித்துவிட்டார்கள் போல.

மணிரத்னம் இயக்கிய ஆய்த எழுத்து படத்தில் முதலில் விக்ரம்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த படத்தில் சூர்யா இருக்கிறார் என்கிற காரணத்தால் விக்ரம் நடிக்கவில்லை என்று கூறப்பட்டது. ஏனென்றால் அந்த படத்தின் நாயகனாக சூர்யாதான் வெளியில் தெரிவார் என விக்ரம் முன்பே கணித்திருந்தார். இப்படி இருவருக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. இந்த சூழ்நிலையில்தான் சூர்யாவின் வாழ்த்து உற்று நோக்கப்படுகிறது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!