மீண்டும் 'ஜெய்பீம்' கூட்டணி - கரம் கோர்க்கும் சூர்யா- ஞானவேல்

மீண்டும் ஜெய்பீம் கூட்டணி - கரம் கோர்க்கும் சூர்யா- ஞானவேல்
X

suriya next movie-ஜெய்பீம் கூட்டணி மீண்டும் இணைகிறது.

Suriya Next Movie- பல தரப்பினர் பாராட்டை பெற்ற 'ஜெய்பீம்' கூட்டணி, மீண்டும் கைகோர்க்கிறது. அடுத்து சூர்யா நடிப்பில், ஞானவேல் இயக்கும் புதிய படம் உருவாகிறது.

Suriya Next Movie- நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில், கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெய்பீம். நேரடியாக OTT தளத்தில் வெளியான ஜெய்பீம், தமிழகம் மட்டுமின்றி, இந்தியளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படமாக மாறியது.


ஜெய்பீம்' படம் கடந்தாண்டு அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தீபாவளி வெளியீடாக நவம்பர் 2ம் தேதியன்று உலகம் முழுவதும், 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் ரிலீஸ் ஆனது.

'ஜெய் பீம்' திரைப்படம், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் தமிழகத்தில் 1995-ல் நடந்த சம்பவங்களைக் கொண்டு இயக்குனர் ஞானவேல் கதையை உருவாக்கினார். இந்தத் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தில், சூர்யா நடித்தார்.

பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடும் வழ்க்கறிஞராக, முன்னாள் நீதியரசர் சந்துருவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சிறு பகுதியை எடுத்து, இந்த படம் உருவானது. படத்தினை ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைந்து தயாரித்தார். 'ஜெய்பீம்' படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்தார்.


'ஜெய்பீம்' ரிலீசான சமயத்தில், படத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், மக்கள் நீதி மையத்தின் தலைவர், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் பா ரஞ்சித், நல்லகண்ணு, சத்யராஜ், சீமான், பாரதிராஜா உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பல வாழ்த்து தெரிவித்தனர். மேலும், இந்தப் படத்திற்கு ஏராளமான பிரபலங்களின் பாராட்டுகள் குவிந்தது.

ஆஸ்கார் விருது யூடியூப் சேனலில், ஜெய்பீம் திரைப்படத்தின் காட்சி இடம் பெற்றது. முதன்முதலாக தமிழ் படங்களில் ஜெய்பீம் படத்தின் காட்சி தான் ஆஸ்கார் யூடியூப்பில் இடம் பிடித்தது. மேலும் 94 வது ஆஸ்கார் விருதுக்கான பட்டியலில் (சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலில் 276 படங்களில்) ஒரு படமாக ஜெய்பீம் இடம் பெற்றது.

மேலும் ஒரு மணிமகுடமாக கோல்டன் குளோப் விருதுக்கு 'சிறந்த ஆங்கிலம் அல்லாத திரைப்பட'த்துக்கான பிரிவில் 'ஜெய்பீம்' திரைப்படம் இந்தியா சார்பாக இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.


இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த மக்களிடயே சிறந்த விமர்சனங்களை பெற்று வெற்றியடைந்த இப்படத்தின் கூட்டணி, மீண்டும் இணைய இருப்பதாக ஏற்கனவே சொல்லப்பட்டது.இதனிடையே தற்போது இயக்குநர் ஞானவேல் அளித்துள்ள பேட்டியில் இதுகுறித்து பேசியுள்ளார். அதன்படி மீண்டும் சூர்யா நடிக்கும் திரைப்படத்தை இயக்க இருப்பதாக ஞானவேல் கூறியுள்ளார். அப்படமும் ஜெய்பீம் போலவே சமூகம் சார்ந்த கதையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

ஜெய் பீம் திரைப்படத்திற்கு முன்பே, அப்படத்தின் கதை குறித்து சூர்யாவிடம் சொன்னதாகவும், அப்போதே சூர்யா அப்படத்தில் நடிப்பதை உறுதி செய்தாகவும் கூறியுள்ளார். மேலும் தற்போது அப்படத்தின் ஷூட்டிங் பணிக்கான வேலைகள் நடந்து வருவதாகவும், வரும் மார்ச் முதல் ஷூட்டிங் தொடங்கும் என்றும் கூறி இருக்கிறார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story