சச்சினை சந்தித்த சூர்யா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

சச்சினை சந்தித்த சூர்யா..  இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
X
இன்ஸ்டாகிராமில் சச்சினுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த சூர்யா, அன்பும் மரியாதையும் என பதிவு செய்துள்ளார். இதேபோல டிவிட்டரில் சச்சினும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து அதில் தமிழில் கேப்சன் கொடுத்துள்ளார்.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினை, நடிகர் சூர்யா சந்தித்துள்ளார். இவர்களின் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான சூர்யாவுக்கு கேரளா, ஆந்திர மாநிலங்களிலும் ரசிகர்கள் அதிகம். வட நாட்டிலும் சூர்யாவை பலரும் தெரிந்து வைத்துள்ளனர். சூரரைப் போற்று படத்துக்கு பிறகு ஹிந்தியிலும் ரசிகர்கள் இவரை பின்தொடர்கின்றனர். இவரது அப்டேட்களை எதிர்பார்க்கின்றனர்.

தற்போது சூர்யா தனது 42வது படத்தில் நடித்து வருகிறார். அவரது ஷூட்டிங் ஷெட்யூல் தற்போது மும்பையில் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் சூர்யாவும் சச்சினும் சந்தித்திருக்கிறார்கள். அவர்கள் எதற்காக சந்தித்தார்கள் என்ன விசயம் என எதுவும் தெரியவில்லை.

சூர்யா நடிக்கும் 42வது படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். திஷா பதானி சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வரும் இந்த படத்துக்கு இசை தேவி ஸ்ரீபிரசாத். இப்படத்தின் ஷூட்டிங் இந்தியாவின் பல்வேறு பாகங்களிலும் பிஸியாக நடந்து வருகின்றது.

இது தவிர வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படம் அறிவிக்கப்பட்டது 5 நாட்கள் படப்பிடிப்பு நடந்ததாகவும் பின் சில காரணங்களுக்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா ஒரு படம் நடிக்க வேண்டியது. ஆனால் அவருக்கு கையில் அடிபட்டு 15 நாட்களுக்கு மேல் சிகிச்சை எடுத்துக் கொண்டு ஓய்வில் இருப்பதால் அவர் தற்போது எடுத்து வரும் ஹிந்தி படத்தை முடிக்க முடியாமல் தாமதமாகி வருகின்றது. அந்த ஹிந்தி படத்தை முடித்துவிட்டுதான் சூர்யா படத்துக்கு வரவேண்டும். மேலும் த செ ஞானவேல் இயக்கத்தில் சூர்யா இன்னொரு படத்தில் முழு நீள கதாநாயகனாக நடிக்க காத்திருக்கிறார். இன்னும் பல இயக்குநர்களிடம் கதை கேட்டு லைனில் வைத்திருக்கிறார் சூர்யா.

இன்ஸ்டாகிராமில் சச்சினுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த சூர்யா, அன்பும் மரியாதையும் என பதிவு செய்துள்ளார். இதேபோல டிவிட்டரில் சச்சினும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து அதில் தமிழில் கேப்சன் கொடுத்துள்ளார்.

இன்று காலை சூரிய உதயம் விசேஷமாக இருந்தது 😃. உங்களை சந்தித்தது அற்புதமாக இருந்தது,

@Suriya_offl

. மனமார்ந்த வாழ்த்துக்கள். என அவர் கூறியுள்ளார்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare