லியோ படத்தில் சூர்யா! ஒரே ஒரு ஃபோன் தான்..! ஆனா தெறி மாஸ்!

லியோ படத்தில் சூர்யா! ஒரே ஒரு ஃபோன் தான்..! ஆனா தெறி மாஸ்!
X
லியோ படத்தில் களமிறங்கவுள்ளாராம் சூர்யா! ஒரே ஒரு ஃபோன் காலில் ஒட்டுமொத்த படமும் பீக் ஆகுமாம்.

விஜய்யும் சூர்யாவும் Suriya in Leo Movie மீண்டும் ஒரு படத்தில் இணைய மாட்டார்களா என்று பல ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். அந்த ஆசை நிறைவேறும் போல தெரிகிறது. விஜய் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரமும் இடம்பெற்றிருக்கிறதாம். விக்ரம் படத்தில் இடம்பெற்ற ரோலெக்ஸ்தான் அந்த கதாபாத்திரம்.

தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள இந்த படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்யுடன் திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் முன்னர் இயக்கிய கைதி, விக்ரம் படங்களில் இடம்பெற்ற கதாபாத்திரங்களும் இந்த படத்தில் வரும் என்றும் இது லோகேஷ் கனகராஜின் சினிமாடிக் யூனிவர்ஸில் வருகிறது என்றும் ரசிகர்கள் பல நாட்களாக கூறி வருகின்றனர். இதனை உண்மை என நம்பும் வகையில் படத்தில் இடம்பெற்றுள்ள துணை நடிகர்களின் பெயர்களும் உறுதிபடுத்துகின்றன.

தளபதி 67 | Thalapathy 67

கடந்த ஜனவரி மாதம் தளபதி 67 என்ற தற்காலிக பெயரில் தொடங்கப்பட்டது இந்த படம். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜூடன் மீண்டும் ஒரு படம் பணிபுரிய ஆசைப்பட்ட விஜய், அவரை அழைத்து கதை கேட்டிருக்கிறார். வாரிசு படத்தைத் தொடர்ந்து இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி, படத்துக்கு லியோ என்று பெயரிட்டிருப்பதாக பிப்ரவரி 3ம் தேதி அறிவிப்பு வெளியானது.

300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஜனவரி 2ம் தேதி துவங்கிய படப்பிடிப்பு, பிப்ரவரி மாதம் காஷ்மீரிலும் தொடர்ந்தது பின் மார்ச் 23ம் தேதியுடன் அந்த ஷெட்யூலும் முடிவடைந்தது. பின் ஜூலை மாதம் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது. இதனையடுத்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.

லியோ படத்திலிருந்து இதுவரை பர்ஸ்ட் லுக் போஸ்டரும், முதல் சிங்கிளும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படமும் எல்சியூவில் இடம்பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Suriya in Leo Movie | லியோவில் சூர்யா

அதன்படி இந்த படத்தில் லியோவும் ரோலெக்ஸும் மொபைலில் பேசுவது போல ஒரு காட்சி அமைய இருக்கிறதாம். அதில் ரோலெக்ஸ் பேச, லியோ கோபப்படுவது போல ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது. அநேகமாக ரோலெக்ஸுக்கு லியோ பாஸாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறப்படுகிறது.

சூர்யாவும் விஜய்யும் Suriya in Leo Movie ஒரே படத்தில் இணைந்து நடிக்க வாய்ப்பிருக்கிறதா என்று ரசிகர்கள் கேட்டுவரும் சூழலில் இதுபோன்ற ஒரு காட்சி படத்தில் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!