கமலுக்கு பிறகு ரஜினியுடன் சேரும் சூர்யா! ஆனால் ரஜினி சம்மதிப்பாரா?

கமலுக்கு பிறகு ரஜினியுடன் சேரும் சூர்யா! ஆனால் ரஜினி சம்மதிப்பாரா?
X
இந்த படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸ் செய்யலாம் என திட்டமிட்டுள்ளார்களாம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து ஜெய்பீம் பட இயக்குநர் த செ ஞானவேல் இயக்கத்தில் புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் ரஜினிகாந்த்.

கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படத்தில் நடித்ததை அடுத்து ரஜினிகாந்துடன் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறாராம் சூர்யா. இந்த படம் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. |rajinikanth surya movie

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துடன் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், மோகன்லால், ஷிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், சுனில் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். மேலும் சிவகார்த்திகேயனும் படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு மிக நேர்த்தியாக துரித கதியில் நடந்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு போஸ்ட் புரடொக்ஷன் பணிகளை ஆரம்பித்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது. | jailer movie release date

ரஜினிகாந்த் இத்தனை வயதிலும் அவுட் டோர் ஷூட்டிங், உடற்பயிற்சி, தியானம் என தவறாமல் கடைபிடிக்கிறார். ஷூட்டிங்கில் இருந்தாலும் தன்னுடைய சக கலைஞன் மறைவுக்கு வந்து ஆறுதல் சொல்லிவிட்டு செல்கிறார். இத்தனை வயதிலும் பம்பரமாய் இயங்குகிறார் என வியப்பவர்களும் இருக்கிறார்கள். நெல்சன் திலீப்குமார் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு 70 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக தெரியவந்துள்ளது. ரஜினிகாந்த் மோகன்லால் காட்சிகள் கொச்சியிலும், ஷிவராஜ்குமாருடனாக காட்சிகள் மங்களூருவிலும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சில காட்சிகளை சென்னையிலும் எடுத்திருக்கிறார்கள். சுனில், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். | rajinikanth jailer update

இந்த படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸ் செய்யலாம் என திட்டமிட்டுள்ளார்களாம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து ஜெய்பீம் பட இயக்குநர் த செ ஞானவேல் இயக்கத்தில் புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் ரஜினிகாந்த். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் 15 முதல் 20 நிமிடங்கள் வரும் ஒரு காட்சியில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்று வருகிறதாம். அதில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஒருவரை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று த செ ஞானவேல் நினைக்கிறாராம். | rajinikanth tj gnanavel movie update

ஏற்கனவே கமல்ஹாசனுடன் கேமியோ ரோல் செய்திருந்த சூர்யா, அடுத்து ரஜினியுடனும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் த செ ஞானவேல் சூர்யாவின் நெருங்கிய நண்பர். அவர் சொன்னால் சூர்யா கேட்பார் என்பதுதான். ஆனால் இதனை ரஜினிகாந்த் ஏற்றுக் கொள்வாரா என்பதுதான் தெரியவில்லை. ஏனெனில் ஏற்கனவே ஜெயிலர் படத்தில் நெல்சன் திலீப்குமார் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க முயற்சி செய்த போது ரஜினிகாந்த் ஒப்புக் கொள்ளவில்லை. சிவகார்த்திகேயன் ரஜினியின் தீவிரமான ரசிகராக இருந்தபோதிலும் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் சூர்யாவை தனது படத்தில் நடிக்க வைக்க ஒப்புக் கொள்ளமாட்டார் என்கிறார்கள். | sivakarthikeyan rajinikanth

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!