தெலுங்கு நடிகருடன் இணையும் சூர்யா! மாஸான அதிரடி ஆக்ஷன்தான்!

தெலுங்கு நடிகருடன் இணையும் சூர்யா! மாஸான அதிரடி ஆக்ஷன்தான்!
X
நடிகர் சூர்யா கங்குவா படத்துக்கு பிறகு இணையும் இயக்குநர் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

Suriya Next Movie Update நடிகர் சூர்யா பிரபல தெலுங்கு இயக்குநருடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் தனியாக திரைப்படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆகின்றது. கடந்த 2022ம் ஆண்டு துவக்கத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானது. அதனையடுத்து கமல்ஹாசன் - லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக இணைந்த விக்ரம் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூர்யா.

தற்போது, சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஒரு வரலாற்றுத் திரைப் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்துக்காக மிகவும் மெனக்கெட்டு தனது உடலை கட்டுமஸ்தாக மாற்றி நடித்து வருகிறார். சூர்யா இந்த படத்தில் இரண்டு விதமான தோற்றங்களில் நடித்துள்ளார் எனவும், இதில் இவருக்கு இரண்டு ஜோடிகள் இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்த படம் 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் என தெரிகிறது.

சூர்யாவுக்கு ஜோடியாக இந்த படத்தில் திஷா பதானி நடித்துள்ளார். அவருக்கு பாடல் காட்சிகள் மட்டுமின்றி சண்டைக் காட்சிகளும் இருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து இந்த படத்தில் இன்னொரு நடிகையும் நடிக்கிறாராம். அதனை சீக்ரெட்டாக வைத்திருக்கிறது படக்குழு.

கங்குவா படத்திற்கு பிறகு, இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறாராம் சூர்யா. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடிப்பார் என தகவல் வெளியானது. அது மட்டுமல்லாமல், இந்த படத்தில் சூர்யாவிற்கு தம்பியாக நடிகர் துல்கர் சல்மான் நடிக்கிறார் என்றும் அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பும் கூடிய விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வராததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

அடுத்ததாக, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த வாடிவாசல் படமும் அப்படியே இருக்கிறது. வெற்றிமாறன் விடுதலை படத்துக்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரோலெக்ஸ், இரும்பு கை மாயாவி போன்ற படங்களும், ஹிந்தியில் கர்ணா படமும் அவரது லைன் அப் படங்களாக இருக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், நடிகர் சூர்யா, தெலுங்கு இயக்குனர் போயபட்டி சீனுவுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தெலுங்கில் லெஜெண்ட், சரைனோடு, அகண்டா போன்ற மாஸ் ஆக்ஷன் படங்களை இயக்கிய போயபட்டி சீனு இயக்கத்தில் சூர்யாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இது உறுதியாகும் பட்சத்தில் 'கங்குவா' படப்பிடிப்பிற்கு பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

போயபட்டி சீனுவின் படங்கள் பொதுவாகவே ஆக்ஷன் ட்ராமா படங்களாகவே இருக்கும். எனவே, சூர்யாவின் படமும் அப்படியே இருக்கும் எனத்தெரிகிறது. இந்த படம் குறித்த பேச்சுவார்த்தை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. எனினும், இயக்குனர் மற்றும் ஹீரோவிடம் இருந்து எந்த தகவலும் வெளிவரவில்லை.

சூர்யாவின் இந்த புதிய படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!